நேற்றையைவிட இன்று பாதிப்பு மற்றும் மரணம் அதிகம்!! தமிழகத்தின் நிலவரம் என்ன? முழு விவரம்

மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், இதுவரை 1,13,856 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் சனிக்கிழமையான இன்று மட்டும் 3049 பேர் குணமடைந்து உள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 18, 2020, 07:24 PM IST
நேற்றையைவிட இன்று பாதிப்பு மற்றும் மரணம் அதிகம்!! தமிழகத்தின் நிலவரம் என்ன? முழு விவரம் title=

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (சனிக்கிழமை) 4807 புதிய கோவிட் -19 (COVID-19) தொற்றும், 88 இறப்புகளும் பதிவாகியுள்ளன, தற்போது மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 1,65,714 ஆகவும், இறப்புகள் 2,403 ஆகவும் உள்ளன. இன்றைய மொத்த கொரோனா பாதிப்பில் சென்னையில் 1219 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கையை வைத்து பார்த்தால், கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது புள்ளி விவரங்களின் அடிப்படையில் கணக்கிட முடிகிறது. இதுவரை, தமிழகத்தின் தலைநகரான சென்னை (Chennai) மாநகரில் 84,598 பேருக்கு COVID-19 பதிவாகியுள்ளன.

இன்று வரை மொத்தம் 18,79,499 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் இன்றைய எண்ணிக்கை 48,195 ஆகும்.  மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், இதுவரை 1,13,856 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் சனிக்கிழமையான இன்று மட்டும் 3049 பேர் குணமடைந்து உள்ளனர் என அறிக்கை தெரிவிக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, இன்னும் மாநிலத்தில் 49,452 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இன்றைய மாநில நிலவரம்: ஜூலி 18, 2020
இன்று எண்ணிக்கை- 4807
சென்னை - 1219
மரணம் - 88
வெளியேற்றம் - 3049
சோதனை எண் - 48,195

இதுவரை தமிழகத்தின் மொத்தம் எண்ணிக்கை:
செயலில் உள்ள வழக்குகள் - 49,452
நேர்மறை வழக்கு - 1,65,714
சென்னை வழக்கு - 84,598
இறப்பு எண்ணிக்கை - 2,403
வெளியேற்றம் - 1,13,856
சோதனை எண் - 18,79,499

 

Image

Trending News