ஆளுநரை மாற்றுவதா?... நெவர்... எல். முருகன் உறுதி

ஆளுநரை மாற்றுவதெல்லாம் நடக்காத விஷயமென்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 5, 2022, 06:11 PM IST
  • மத்திய இணையமைச்சர் புதுச்சேரி வந்திருக்கிறார்
  • பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்
  • ஆளுநரை மாற்றுவது நடக்காத காரியம் என்றார்
 ஆளுநரை மாற்றுவதா?... நெவர்... எல். முருகன் உறுதி

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரண்டு நாள்கள் பயணமாக புதுச்சேரிக்கு வந்திருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் பாஜக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய அரசியல் சட்டப்படி தமிழக ஆளுநருக்கு கருத்து கூற உரிமையும், சுதந்திரமும் உள்ளது. ஆகவே, திமுக அரசு நீட்டுகிற கோப்புகளில் கையெழுத்திடும் கைப்பாவையாக ஆளுநர் இல்லை. கோப்புகளில் சந்தேகம் எழுந்தால் கேள்வி கேட்கிறார். அதனாலேயே தமிழக ஆளுநரின் செயல்பாட்டை திமுகவினர் விமரிசிக்கிறார்கள்.

ஆளுநரை மாற்ற வேண்டும் என்கின்றனர். ஆளுநரை மாற்றும் விஷயங்கள் நடக்காத ஒன்று. அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் தங்களது பணியைத்தான் செய்து வருகிறார்கள். புதுச்சேரியை பொறுத்தவரையில் ஆளுநர், முதல்வர் இணைந்து எல்லா திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரி முதல்வரை எதிர்த்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் போராடிய பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது. அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் பங்கேற்றதில் தவறில்லை.

மேலும் படிக்க | மற்ற மாநிலங்களைப் போல் இல்லை... தமிழ்நாட்டில் பேரணியை தள்ளிவைத்த ஆர்எஸ்எஸ்

தெலங்கானாவில் ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரம் பேசிய விவகாரத்தில் பாஜகவுக்கு தொடர்பில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குமாறு முதல்வர் கோரியதை மத்திய உள்துறை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றார்.

மேலும் படிக்க | ஆதார் கார்ட் தரவுகளை பாதுகாக்க அதை லாக் / அன்லாக் செய்யலாம்: செயல்முறை இதோ

மேலும் படிக்க | உண்டியல் குலுக்கியவர்கள் இப்போது விலை போய்விட்டார்கள் - கம்யூனிஸ்ட்டை சாடிய சி.வி.சண்முகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

More Stories

Trending News