மேற்கு வங்கம் மாநிலத்தில் நேற்று குழந்தையை திருட்டுவதாக நினைத்து பெண்ணை சரமாரியாக தாக்கிய கும்பல்.
தமிழகம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் குழந்தை கடத்தல் பற்றிய வதந்திகள் சமூக வலைதளத்தில் அதிகமாக பரவி வருகிறது. சாதாரணமாக யாரவது குழந்தை அருகில் சென்றாலே, அவர்களைக் குழந்தை திருடும் கும்பல் என நினைத்து, ஒரு கூட்டமே சேர்ந்து ஒருவரைத் கொடூரமாக தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இதையும் படிக்கவும்: குழந்தை கடத்தல் வதந்தி: வடமாநில இளைஞர் மீது வெறி தாக்குதல்!
இது போன்ற சம்பவங்களினால், இந்தியா முழுவதும் இதுவரை சுமார் 30 பேர் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளதாக தகவல் தெவித்துள்ளது. இது போன்ற வதந்திகள் நமது நாட்டில் மட்டுமில்லாமல் உலக முழுவதும் இப்படி வதந்திகள் பரப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரைப்பை ஏற்படுத்தியுள்ளது.
West Bengal: A mentally-challenged woman was thrashed by a mob in Jalpaiguri yesterday over the suspicion of child theft. The police has registered a suo moto case. Investigation is underway. pic.twitter.com/2B9BpW3v2s
— ANI (@ANI) July 17, 2018
இதையும் படிக்கவும்: சிவப்பு டிக்கில் எச்சரிக்கை செய்யும் வாட்ஸ்-அப்பின் புதிய அப்டேட்!!
இதைபோல தான் நேற்று மேற்கு வங்கம் மாநிலத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.., குழந்தையை திருட வந்ததாக நினைத்து அந்த பெண்ணின் ஆடைகளை எல்லாம் கிழிக்கப்பட்டு சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் அந்த பெண்மணிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.