Vi, Jio, Airtel: ரூ.296க்கு சிறந்த ஆபர்களை வழங்குவது யார்?

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 திட்டத்தின் நன்மைகளை போன்றே வோடோபோன் ஐடியா நிறுவனமும் ரூ.296 விலையில் நன்மைகளை வழங்குகிறது. 

Written by - RK Spark | Last Updated : Mar 6, 2023, 11:41 AM IST
  • VI ரூ.296 திட்டத்தை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.
  • ரூ.296 விலையில் VI, ஜியோ மற்றும் ஏர்டெல் ஒரே மாதிரியான பலன்களை வழங்குகிறது.
  • VI-ஐ விட ஜியோ மற்றும் ஏர்டெல் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.
Vi, Jio, Airtel: ரூ.296க்கு சிறந்த ஆபர்களை வழங்குவது யார்?  title=

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 திட்டத்தின் நன்மைகளை போன்றே வோடோபோன் ஐடியா நிறுவனமும் ரூ.296 விலையில் நன்மைகளை வழங்குகிறது. 

 

டோபோன் ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்காக ரூ.296 விலை மதிப்பில் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் செல்லுபடியாகக்கூடிய மொத்த டேட்டா, எஸ்எம்எஸ், இலவச அழைப்பு போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.  ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 திட்டத்தின் நன்மைகளை போன்றே வோடோபோன் ஐடியா நிறுவனமும் ரூ.296 விலையில் நன்மைகளை வழங்குகிறது.  குறைவான விலையில் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் மாதாந்திர வேலிடிட்டியை விரும்பும் வாடிக்கையாளர்களை குறிவைத்து வோடோபோன் தனது ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த ப்ரீபெய்டு திட்டத்தின் மூலம் வோடோபோன் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் பேக்கேஜ்களுடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க | அட நம்புங்க.. ரூ.20,000 ரியல்மீ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.649!! கலக்கும் பிளிப்கார்ட்!

வோடோபோன் ஐடியா வழங்கும் ரூ.296 ப்ரீபெய்டு திட்டம்:

வோடோபோன் ஐடியா வழங்கும் ரூ. 296 விலை மதிப்புள்ள திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.  இது வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 25 ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது.  இந்த ப்ரீபெய்ட் திட்டம் Vi Hero அன்லிமிடெட் நன்மைகளை தரவில்லை என்றாலும் Vi மூவிஸ் மற்றும் Vi டிவி போன்றவற்றின் நன்மைகளை வழங்குகிறது.

ஜியோ ரூ.296 ப்ரீபெய்டு திட்டம்:

ஜியோ வழங்கும் ரூ.296 விலை மதிப்புள்ள திட்டமானது  30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.  இது வாடிக்கையாளர்களுக்கு 25 ஜிபி மொத்த டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.  இதுதவிர ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ க்ளவுட் மற்றும் ஜியோ சினிமா போன்ற ஜியோவின் பயன்பாடுகளுக்கு இலவச அணுகல் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்டு திட்டம்:

ஏர்டெல் வழங்கும் ரூ.296 திட்டமானது 30 நாட்கள் வேலிடிட்டியுடன், 25ஜிபி மொத்த டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.  இந்த திட்டத்தில்வின்க் மியூசிக் இலவச அணுகல், மூன்று மாத அப்போலோ 24x7 சந்தா, பாட்ஸ்டேக்-ல் 100 கேஷ்பேக் , இலவச ஹெலோடியூன்ஸ் போன்ற சலுகைகள் கிடைக்கிறது.  ரூ.296 விலையில் வோடோபோன் ஐடியா, ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரே மாதிரியான டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு பலன்களை வழங்குகிறது.  இருப்பினும் வோடபோன் திட்டத்தை விட ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. ஏர்டெல் மற்றும் ஜியோ திட்டங்கள் தலா நான்கு ஆட்-ஆன்களையும், இலவச 5G இணையத்துடன் வழங்குகின்றன.

மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத டிஏ நிலுவைத் தொகை கிடைக்கவுள்ளதா? முக்கிய அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News