காலையில் உங்கள் பைக் ஸ்டார்ட் ஆகவில்லையா? இந்த வழிகளை முயற்சி செய்யுங்கள்!

Bike Issue: பொதுவாக குளிர்காலத்தில் காலையில் பைக்கை ஸ்டார்ட் செய்வது மிகவும் சிரமம்.  சில சமயம் இவ்வளவு கிக் ஸ்டார்ட் செய்தால் பைக் ஆன் ஆகாது.    

Written by - RK Spark | Last Updated : Feb 4, 2024, 07:07 AM IST
  • பைக்கை பராமரிப்பது மிகவும் முக்கியம்.
  • என்ஜின் ஆயிலை அடிக்கடி மாற்றுவது நல்லது.
  • காலையில் கிக் ஸ்டார்ட் செய்து பழகுங்கள்.
காலையில் உங்கள் பைக் ஸ்டார்ட் ஆகவில்லையா? இந்த வழிகளை முயற்சி செய்யுங்கள்!

Bike Issue: குளிர்கால மாதங்களில் பைக்கை காலையில் ஸ்டார்ட் செய்வது ஒரு பெரிய பிரச்சனை ஆகும். இந்த சமயங்கில் பைக் ஸ்டார்ட் ஆகாமல் இருப்பது, பைக் வைத்திருப்போர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாகும். அதிகமான குளிர் பைக்கின் இன்ஜினில் இறங்கினால் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.  இருப்பினும், இந்த பிரச்சனை தினசரி தொடர்ந்தால், காலையிலேயே டென்ஷன் ஆகி அன்றைய நாள் முழுவதும் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் பைக்கில் தினமும் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், ஏன் அவ்வாறு ஏற்படுகிறது? அதனை எப்படி சரி செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | FASTag பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆர்பிஐ!

ஸ்டார்ட் ஆவதில் என்ன என்ன பிரச்சனைகள் வரலாம்?

பேட்டரி பலவீனமடைதல்: பைக் ஸ்டார்ட் ஆகாததற்கு பொதுவான காரணம் அதன் பலவீனமான பேட்டரி ஆகும். பழைய பேட்டரி அல்லது பேட்டரியில் சார்ஜ் இல்லாமல் போய்விட்டால், ஸ்டார் ஆவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மோட்டாருக்கு போதுமான சக்தியை வழங்க முடியாது, இதன் காரணமாக பைக் ஸ்டார்ட் ஆகாது.

எஞ்சின் ஆயில்: பைக்கில் எஞ்சின் ஆயிலை சரியான இடைவெளியில் மாற்ற வேண்டும். என்ஜினில் இருக்கும்  எண்ணெய் பழையதாக மாறும்போது, ​​​​அது சரியாக வேலை செய்யாது. இதன் விளைவாக இன்ஜின் செயலிழப்பும் ஏற்படுகிறது. எனவே, பைக் அல்லது ஸ்கூட்டரை சரியான முறையில் சர்வீஸ் செய்வது மற்றும் தேவைப்படும் போது என்ஜின் ஆயிலை மாற்றுவது முக்கியம்.

ஸ்பார்க் பிளக்: பைக்கின் எஞ்சினில் உள்ள எரிபொருள் கலவையை பற்றவைக்க ஸ்பார்க் பிளக் மிக முக்கியமானது. இந்த ஸ்பார்க் பிளக் மோசமாக இருந்தால், பைக்கை ஸ்டார்ட் செய்வதில் சிரமம் ஏற்படலாம். சிலருக்கு பைக்கில் எவ்வளவு பெட்ரோல் இருக்கிறது என்று தெரியாது. காலையில் பைக் ஸ்டார்ட் ஆகாததற்கு இதுவும் ஒரு பொதுவான காரணம் ஆகும். பைக்கில் பெட்ரோல் இல்லை என்றால் கிக்கரை எவ்வளவு மிதித்தாலும் ஸ்டார்ட் ஆகாது.

ஏர் பில்டர்: ஏர் பில்டர் இன்ஜினுக்கு காற்றை வழங்குகிறது. ஏர் பில்டர் அழுக்காகிவிட்டால், அது இயந்திரத்திற்கு போதுமான காற்றை வழங்காது, இதனால் பைக் ஸ்டார்ட் ஆகாது.  மேலும் பைக்கின் எஞ்சினில் உள்ள எரிபொருள் மற்றும் காற்றின் கலவையை கார்பூரேட்டர் கட்டுப்படுத்துகிறது. கார்பூரேட்டரில் அழுக்கு இருந்தால், பைக் ஸ்டார்ட் ஆவதில் சிக்கல் ஏற்படும்.  அதே போல இன்ஜினில் ஏதேனும் கோளாறு இருந்தால், பைக்கை ஸ்டார்ட் ஆவதில் தடையாக இருக்கும்.

இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்

உங்கள் பைக் பேட்டரியை அவ்வப்போது சரிபார்த்து வைத்து கொள்ளுங்கள், சார்ஜ் இல்லை என்றால் சார்ஜ் போட்டு கொள்ளுங்கள் அல்லது புதிய பேட்டரியை மாற்றி விடுங்கள். தினசரி இரவு வீட்டிற்கு வரும் முன் பைக்கில் எவ்வளவு பெட்ரோல் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெட்ரோல் டிரை ஆனால் பைக் ஸ்டார்ட் ஆகாது. மேலும்,  ஸ்பார்க் பிளக் மற்றும் ஏர் பில்டரை அடிக்கடி செக் செய்து கொள்வது நல்லது.   அதே போல உங்கள் பைக்கின் கார்பூரேட்டரை சுத்தம் செய்யவும். நீங்கள் எவ்வளவு மிதித்தும் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், உங்கள் பைக்கை மெக்கானிக்கிடம் எடுத்து செல்வது நல்லது.

மேலும் படிக்க | வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு 2500 ரூபாய் ஆபர்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News