Flipkart Sale: வெறும் ரூ. 1099-க்கு Samsung Galaxy F42-ஐ வாங்க சூப்பர் வாய்ப்பு

குறைவான பட்ஜெட்டில் நீங்கள் 5 ஜி போனை வாங்க திட்டமிட்டிருந்தால், இப்போது உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 21, 2021, 05:50 PM IST
  • ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல பொருட்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.
  • 5G தொலைபேசிகளும் இந்த சேலில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.
  • பிளிப்கார்ட்டில் Galaxy F42 5G போனில் ரூ .6,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Flipkart Sale: வெறும் ரூ. 1099-க்கு Samsung Galaxy F42-ஐ வாங்க சூப்பர் வாய்ப்பு title=

Flipkart Diwali Sale: இந்தியாவில் தற்போது பண்டிகை காலம்!! மக்களுக்கு இது மகிழ்ச்சிகரமான காலம். இந்த நேரத்தில் மக்கள் பல புதிய பொருட்களை வாங்குவது வழக்கம்.

ஃப்ளிப்கார்ட்டிலும்  (Flipkart) பிக் தீபாவளி விற்பனை லைவாக உள்ளது. இதில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல பொருட்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன. ஐபோன், சாம்சங், சியோமி செல்போன்களை மக்கள் அதிக அளவில் வாங்கி வருகின்றனர். ஐபோன் 12-ம் அதிக வாடிக்கையாளர்களால் வாங்கப்படுகின்றது. ஏனென்றால் இந்த சேலில் ஐபோன் 12 மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது.

5G தொலைபேசிகளும் இந்த சேலில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன. குறைவான பட்ஜெட்டில் நீங்கள் 5 ஜி போனை வாங்க திட்டமிட்டிருந்தால், இப்போது உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நீங்கள் சாம்சங்கின் கேலக்ஸி F42 5G ஐ ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். இதில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ALSO READ: Buy Now Pay Later: பண்டிகை கால ஷாப்பிங்கில் இனி டென்ஷன் வேண்டாம் 

Samsung Galaxy F42 5G: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

பிளிப்கார்ட்டில் Galaxy F42 5G போனில் ரூ .6,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த போனை ரூ. 17,999 க்கு வாங்கலாம். கூடுதலாக இதில் வங்கி சலுகைகள் மற்றும் பரிமாற்ற சலுகைகளும் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி இந்த தொலைபேசியை மிகவும் மலிவான விலையில் வாங்கலாம்.

நீங்கள் எஸ்பிஐ (SBI) கிரெடிட் கார்ட் கொண்டு பணம் செலுத்தினால், ரூ. 1250 உடனடி தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, 15,650 ரூபாய் மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. எக்ஸ்சேஞ்சில் பழைய போனை கொடுத்தால், புதிய போனை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம். எனினும், இந்த சலுகையைப் பெற, உங்கள் பழைய தொலைபேசியின் நிலை நன்றாக இருக்க வேண்டும். மேலும், அது சமீபத்திய மாடல் தொலைபேசியாக இருக்க வேண்டும்.

ஐபோன் 12 இல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி

பிளிப்கார்ட் சமீபத்தில் தனது பிக் பில்லியன் விற்பனையின் போது ஐபோன்களுக்கு (iPhones) பெரும் தள்ளுபடியை வழங்கியது. இந்த நிலையில், நிறுவனம் இப்போது தீபாவளி விற்பனையின்போதும் அதிக தள்ளுபடியை வழங்குகிறது. எம்ஆர்பியில் 18 சதவீத தள்ளுபடியுடன், iPhone 12 64GB, ரூ. 53,900 க்கும், ஐபோன் 12 மினி ரூ. 42,099 க்கும் கிடைக்கிறது. இது 29 சதவீதம் தள்ளுபடியாகும்.

பிளிப்கார்ட்டில் பழைய போன் எக்ஸ்சேஞ்சுக்கு அதிகபட்சமாக ரூ .15,650 வழங்கப்படுகின்றது. இரண்டு சாதனங்களையும் முறையே ரூ .38,250 மற்றும் ரூ .26,449 க்கு வாங்கலாம்.

ALSO READ: Flipkart அசத்தும் சலுகை: வெறும் ரூ.4,999-க்கு கிடைக்கிறது சாம்சங் Smart TV 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News