Bed AC: பில் பற்றிய கவலையே இல்லை; 3 பல்புகளுக்கான மின்சார செலவு மட்டுமே..!

படுக்கைப் பகுதியை மட்டும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஏசி ஒன்றை Tupik நிறுவனம் வடிவமைத்துள்ளது. இது மட்டுமின்றி மற்ற குளிரூட்டிகளுடன் ஒப்பிடும் போது இந்த ஏசி மின்சார உபயோகத்தை 60 முதல் 65 சதவீதம் வரை குறைக்கும். அதை பற்றி தெரிந்து கொள்வோம்...

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 30, 2022, 09:25 AM IST
  • Tupik Private Limited என்ற நிறுவனம் தனித்துவமான ஏசியை வடிவமைத்துள்ளது.
  • இந்த ஏர் கண்டிஷனர் படுக்கை பகுதியை மட்டும் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
  • மின்சாரம் 60 முதல் 65 சதவீதம் வரை குறையும்.
Bed AC: பில் பற்றிய கவலையே இல்லை; 3 பல்புகளுக்கான மின்சார செலவு மட்டுமே..! title=

கோடை காலம் வந்துவிட்டது. வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ  ஏசி இல்லாமல் இருக்க முடியாத நிலை தான் உள்ளது. ஆனால் இதில் மிகப்பெரிய பிரச்சனை மின் கட்டணம். ஏசி தொடர்ந்து இயங்குவதால் மின்கட்டணமும் மிக அதிகமாக வருகிறது. 

இந்த பிரச்சனைக்கான தீர்வை இன்று நாங்கள் உங்களிடம் கொண்டு வந்துள்ளோம். படுக்கைப் பகுதியை மட்டும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஏசி பற்றித்தான் சொல்லப் போகிறோம். இது மட்டுமின்றி மற்ற குளிரூட்டிகளுடன் ஒப்பிடும் போது இந்த ஏசி மின் உபயோகத்தை 60 முதல் 65 சதவீதம் வரை குறைக்கும். அதை பற்றி தெரிந்து கொள்வோம்...

டெண்ட் ஏசி உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும்

Tupik Private Limited என்ற நிறுவனம், படுக்கைப் பகுதியை மட்டும் குளிர்விக்கும் தனித்துவமான ஏசியை வடிவமைத்துள்ளது. இதன் வடிவமைப்பும் கூடாரம் போன்றது, இதை நிறுவனத்தின் நிறுவனர் ரவி படேல்  இதனை வடிவமைத்துள்ளார். இதனால், வெப்பத்தில் தாக்கத்தில் இருந்து விடுபடுவதுடன், மின் கட்டணத்தையும் பெரிதும் குறைக்கலாம். இந்த ஏசி சுற்றுச்சூழலையும் பாதிக்காது.

மேலும் படிக்க | இந்த சலுகையில் கிடைக்கும் 75 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி, 225GB இலவச டேட்டா

Tupik Bed ACக்கு சுமார் 400W மின்சாரம் தேவைப்படுகிறது. அதாவது, மூன்று பல்புகளை மட்டும் எரிய வைத்தால் ஆகும் மின்சார செலவு தான் ஆகும். இந்த மேம்பட்ட ஏசியை சோலார் மூலம் இயக்கலாம். மிக சிறிய அளவிலான இந்த ஏசி படுக்கையை டெண்ட் போல் அமைத்து பொருத்தப்பட்டுள்ளது. இது பொருத்தப்பட்டவுடன் படுக்கை பகுதியை குளிர்விக்கும். 

இன்வெர்ட்டரிலும் இயங்கும்

இந்த ஏசியை 5 ஆம்ப் சாக்கெட் மூலம் எளிதாக இயக்க முடியும். அதைப் பொருத்துவதற்கு யாருடைய உதவியும் உங்களுக்குத் தேவைப்படாது. அதை நீங்களே மிக எளிதாக பொருத்திக் கொள்ள முடியும். மின்வெட்டு ஏற்பட்டால், 1KVA திறன் கொண்ட இன்வெர்ட்டரின் உதவியுடன் இந்த ஏசியை இயக்கலாம்.

மேலும் படிக்க | குறைந்த விலையில் ஆஃபர்களை அள்ளி வழங்கும் BSNL..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News