OPPO A1: அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகம், குறைந்த விலை, அற்புத அம்சங்கள்

OPPO A1: OPPO A1 இன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 14, 2023, 03:50 PM IST
  • Oppo A1: இந்த ஸ்மார்ட்போனின் விலை என்ன?
  • ஓப்போ ஏ1 இல் இரட்டை கேமரா அமைப்பு கிடைக்கிறது.
  • இதில் 50எம்பி முதன்மை கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் உள்ளது.
OPPO A1: அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகம், குறைந்த விலை, அற்புத அம்சங்கள் title=

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஓப்போ (OPPO) இந்த வார தொடக்கத்தில் சீனாவில் ஓப்போ ஏ1 5ஜி (OPPO A1 5G) ஸ்மார்ட்போனை ப்ரீ ஆர்டர் புக்கிங்குகளுக்காக கிடைக்கச் செய்தது. இந்த போன் இன்று முதல் உள்நாட்டு சந்தையில் வாங்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் அதிக திறங்கொண்ட ரேம், பெரிய திரை, நேர்த்தியான கேமரா மற்றும் வலுவான பேட்டரி ஆகியவை கிடைக்கின்றன. OPPO A1 இன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Oppo A1: இந்த ஸ்மார்ட்போனின் விலை என்ன? 

ஓப்போ ஏ1 ஸ்மார்ட்போன் சிங்கிள் கான்ஃபொகரேஷனுடன் அறிமுகம் ஆகியுள்ளது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்தின் விலை 1999 யுவான் (சுமார் 23 ஆயிரம் ரூபாய்) ஆகும். இந்த போன் மூன்று வண்ணங்களில் (Sandstone Black, Haohai Blue மற்றும் Cabernet Orange) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பின்புறத்தில் ஆரஞ்சு வேரியண்டில் லெதர் ஃபினிஷ் கிடைக்கும்.

மேலும் படிக்க | பாதி விலையில் iPhone 12 Pro Max..! அலைமோதும் வாடிக்கையாளர்கள் - விலை இதோ..!

OPPO A1: விவரக்குறிப்புகள்

ஓப்போ ஏ1 ஸ்மார்ட்போன் ஆனது 1080 x 2400 பிக்சல்கள் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தின் முழு HD+ தெளிவுத்திறனுடன் 6.72-இன்ச் IPS LCD டிஸ்ப்ளேவைப் பெறப் போகிறது. A1 ஆனது 91.4 சதவிகித திரை இடத்தைக் (ஸ்க்ரீன் ஸ்பேஸ்) கொண்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது. இதில் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது.

OPPO A1: கேமரா

ஓப்போ ஏ1 இல் இரட்டை கேமரா அமைப்பு கிடைக்கிறது. இதில் 50எம்பி முதன்மை கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் உள்ளது. இது தவிர, எல்இடி ஒளிரும் விளக்கு (ஃப்ளேஷ் லைட்) உள்ளது. இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 30 நிமிடங்களில் தொலைபேசி 0 முதல் 70 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த தொலைபேசி ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது

மேலும் படிக்க | டெபிட் கார்டு இல்லாமல் UPI மாற்றுவது எப்படி? ஈஸியான வழி இதோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News