எச்சரிக்கை! போலி லோன் செயலிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க டிப்ஸ்

உடனடியாக கடன் வழங்கும் போலி லோன் செயலிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்க 6 முக்கிய டிப்ஸ்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 27, 2022, 02:52 PM IST
  • போலி கடன் செயலிகளினால் ஆபத்து
  • உஷாராக இருக்க வங்கி அறிவுறுத்தல்
  • பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
எச்சரிக்கை! போலி லோன் செயலிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க டிப்ஸ் title=

அண்மைக்காலமாக லோன் செயலிகள் அதிகம் அதிகரித்து வரும் நிலையில், அவை கடன் வசூலிக்கும் முறை குறித்த விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சில மோசடியான கடன் வழங்கும் போலி செயலிகள், வாடிக்கையாளர்களை ஆசை வார்த்தைக் கூறி தகிடு தத்தங்களை அரங்கேற்றுகின்றனர். இதில் இருந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். 

போலி கடன் வழங்கும் செயலிகள் எப்படி ஏமாற்றுகிறார்கள்? விழிப்புணர்வுடன் இருக்க வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதற்காக எஸ்பிஐ, வாடிக்கையாளர்களுக்காக 6 முக்கிய டிப்ஸ்களை வழங்கியுள்ளது.   

மேலும் படிக்க | Realme Pad X: வெறும் 20 ஆயிரம் ரூபாய்க்கு புதிய 5ஜி டேப்லெட் அறிமுகம்

இவற்றையெல்லாம் தவிர்க்கவும்

1. சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்வதையோ அல்லது வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு உங்கள் தகவலை வழங்குவதையோ தவிர்க்கவும். 

2. லோன் செயலிகளை பதிவிறக்குவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும். 

3. சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்.

3. உங்கள் தனிநபர் தகவல்களை திருடக்கூடிய அங்கீகரிக்கப்படாத  செயலிகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. 

4. உங்கள் தரவு திருடப்படாமல் பாதுகாக்க ஆப்ஸ் அனுமதி செட்டிங்ஸை சரிபார்க்கவும்.

5. சந்தேகத்திற்கிடமான கடன் வழங்கும் செயலிகள் குறித்து உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்குப் புகாரளிக்கவும்.

6.  சைபர் கிரைம் தொடர்பான புகார்களை நேரடியாக https://cybercrime.gov.in -ல் புகாரளிக்கவும்

ஒருவேளை உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்வது முக்கியம். 

மேலும் படிக்க | BSNL ரூ 19 திட்டம் அறிமுகம்: திணறிப்போன மற்ற நிறுவனங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News