2019 மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டப்பட்டது. அதில் பிரியங்கா காந்தி குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை.
உலக புகழ்பெற்ற தாஜ் மஹால் நினைவுச்சின்னத்தின் நுழைவாயிலின் தூண் இன்று காலை இடிந்து விழுந்தது. கடும் மழை மற்றும் சூறைகாற்று காரணமாக தாஜ்மஹால் வளாக தூண் இடிந்து விழுந்ததுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் மாநில பணி நியமன குழுவான, உத்தரப்பிரதேச மாநில பொது பணி துறை ஆனது சுமார் 10768 உதவி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
ஆருஷி கொலை வழக்கில் நிரபராதிகள் என கூறப்பட்ட தல்வார் தம்பதியினர் இன்று சிறையில் இருந்து வெளியே வந்தனர்.
டெல்லியின் அருகே உள்ள நொய்டாவைச் சேர்ந்த ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வார் தம்பதியரின் மகள் ஆருஷி தல்வார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு ஆருஷி மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜு இருவரும் அவர்களது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் அலாய்பாத் மாவட்டத்தில், நைனி சந்திப்பின் அருகே ரயில்வே தண்டவாலத்தைக் கடக்கும்போது ஒரு சிறுமி உள்பட் 4 பேர் புபனேஷ்வர்-ராஜ்தானி எக்ஸ்பிரஸில் அடிப்பட்டு இறந்தனர்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கார் ஒன்று ஆற்றில் கவிழ்ந்த விபத்து உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர்.
மதுரா பகுதியில் இன்று அதிகாலை விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் பரேய்லி பகுதியைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காரினுள், அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததோடு, இரவு நேரம் என்பதால் கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றினுள் கவிழ்ந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
நீரில் மூழ்கிய காரையும், 9 பேரின் சடலங்களையும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்ட மன்றத் தேர்தலில், மூன்று மாநிலங்களில் வென்று பாஜக புதிய சாதனை படைத்துள்ளது. இதில், உத்தரகாண்ட் மற்றும் கோவா மாநிலங்களுக்கான முதல்வரை ஏற்கெனவே அந்தக் கட்சி அறிவித்துவிட்டது.
தற்போது உத்தரப்பிரதேச முதல்வர் குறித்து அறிவிப்பு வெளிவராத நிலையில், இன்று தகவல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய பிரதேசத்தில் ரயிலில் குண்டு வெடித்ததில் தொடர்புடைய ஐ.எஸ். தீவிரவாதி முகமது சைபுல்லை உத்தரபிரதேச போலீசார் துப்பாக்கி சண்டையில் சுட்டுக் கொன்றனர்.
சுமார் 10 மணி நேரமாக நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி முகமது சைபுல் கொல்லப்பட்டான். இதனையடுத்து ஐ.எஸ். தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களை வேட்டையாடும் பணி தொடங்கி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், ஜாப்தி ரயில் நிலையம் அருகே போபால் உஜ்ஜைனி பயணிகள் ரெயில் சென்றபோது ரயிலின் பொதுப்பெட்டியில் நேற்று காலை பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் ரயில்பெட்டியின் கூரை வெடித்து சிதறியது.
இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீட்டு கட்டிடத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர் காவல் துறையினர். பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீட்டு கட்டிடத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர் காவல்துறையினர். பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று மாலை தீவிரவாதிகள் திடீரென காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர்கள் வீடு ஒன்றில் பதுங்கி இருந்தபடி இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதற்கு காவல்துறையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இருதரப்பினருக்கும் இடையே பலத்த துப்பாக்கிச் சண்டை நடைபெறும் நிலையில், பதுங்கியுள்ள தீவிரவாதிகளைப் பிடிக்கவும் காவல்துறையினர் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப் பட்டது. இதில் 6 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. 7-வது மற்றும் இறுதிகட்டமாக 40 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடை பெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.
மணிப்பூரில் மொத்தம் உள்ள 60-ல் 38 தொகுதிகளில் முதல்கட்டமாக கடந்த 4-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 2-வது மற்றும் இறுதிகட்டமாக மீதமுள்ள 22 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
முன்னாள் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் சிவ்பால் யாதவ் மார்ச் 11-ம் தேதி உ.பி தேர்தலில் முடிவுகள் அறிவிப்பு பின்னர் ஒரு புதிய கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்தார்.
ராகுல் காந்தி மீது இளைஞர் ஒருவர் ஷூவை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ், பாஜக என அனைத்துக் கட்சிகளுமே தீவிரமாக தேர்தல் பணிகளில் குதித்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.