மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே ஏப்ரல்-மே மாதங்களில் பொதுத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
நாடு முழுவதும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்து வருகிறது. மறுபுறத்தில் மூன்றாவது கூட்டணி அமைக்கும் முயற்சியிலும் சில மாநிலக் கட்சிகள் ஈடுபட்டு உள்ளனர். இன்னும் லோக்சபா தேர்தல்களின் தேதிகள் அறிவிக்கபடாத நிலையில், பல கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது.
நேற்று 17_வது மக்களவைத் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளை முடியும் தருவாயில் உள்ளது. இதனால் இந்த வாரத்தின் இறுதியில் 2019 மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்தநிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ். இந்த பட்டியலில் 15 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள 15 வேட்பாளர்களில் 11 பேர் உத்தர பிரதேசத்தில் போட்டியிடுபவர்கள் மற்ற நான்கு வேட்பாளர்கள் குஜராத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆவார்கள்.
11 வேட்பாளர்கள் கொண்ட உத்தர பிரதேசத்தில் பட்யலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகின்றார். அதேபோல முன்னால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடுகின்றார்.
ஆனால் முதல் முறையாக கட்சியில் பதவி அளிக்கப்பட்ட சோனியாவின் மகள் பிரியங்கா காந்திக்கு போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கட்சியின் சில தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால் சரியான நேரத்தில் பிரியங்கா காந்தி போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்படும் என்றும், அதுக்குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்றும் சில மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.
உத்தர பிரதேசத்தை பொருத்த வரை மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி + சமாஜ்வாடி கட்சி யும் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்கிறது. இதில் காங்கிரஸ் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,.
காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளதால், இன்று பாஜகவும் தனது முதல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் என்று தெரிகிறது.