Tamil Nadu Assembly News: ஆளுநர் வரும்போது அவர் பேசுவதை எடுத்து வெட்டி, ஒட்டி வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பது தெரியவந்தது என்றும் அனுமதி வழங்கப்படாதவர்களை எப்படி பேரவைக்குள் அனுமதிப்பது என்றும் சபாநாயகர் பேசி உள்ளார்.
தமிழ்நாட்டில் ஆறுகளில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு பல்வேறு இடங்களில் தேவையான அளவு தடுப்பணைகள் கட்டப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி.
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு மணி நேர முழு உடல் பரிசோதனைக்கு பின்பு வீடு திரும்பினார்.
நடிகர் ரஜினிகாந்தின் கருத்து குறித்த கேள்விக்கு நகைச்சுவையாகப் பேசியதைப் பகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், தங்களது நட்பு தொடரும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வயதாகி, பல்லு போன நடிகர்கள் எல்லாம் இன்னும் நடிப்பதால்தான் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது என அமைச்சர் துரைமுருகன், நடிகர் ரஜினிகாந்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டுவது குறித்து தீர்ப்பாயம் அமைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் கேட்டிருக்கிறோம் என காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
காட்பாடியில் திமுகவினர் மத்தியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், இம்முறை வட மாநிலங்களில் பாஜகவுக்கு தோல்வி உறுதி என்றார். பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் எதையும் செய்யவில்லை என்றும் விமர்சித்தார்.
TN Minister Duraimurugan: கோவில்களில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பான செய்தி. மத்திய அமைச்சர் இப்படியெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளை கூறக்கூடாது. இது மந்திரிக்கு அழகு அல்ல. பொன்னை ஆற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் -தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
தம்பி உதயநிதி பேசும்போது பக்குவமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க வேண்டும் என திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு அறிவுரை கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.