முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒரு பெண்ணென்றும் பாராமல் எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ, அவ்வளவு அவமானப்படுத்தியது. இதனை அறிந்த திருநாவுக்கரசர் உண்ட கட்சிக்கே ரெண்டகம் செய்திருக்கிறார் என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார்.
திமுகவில் மாவட்ட செயலாளராக இருக்கும் தங்க தமிழ்செல்வன், ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். தனிப்பட்ட ரீதியான சந்திப்பு என்றாலும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தேனியில் பேசிய எச்.ராஜாவிடம் அண்ணாமலையிடம் கொடுக்கப்பட்ட மனு கீழே வீசப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அப்படி சொன்னவர்களை நேரில் கூட்டி வாங்க செவிட்டில் அரைகிறேன் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியிடம் ஒருபோதும் அடைக்கலம் ஆக மாட்டேன் என தெரிவித்திருக்கும் டிடிவி தினகரன், அவரை வீழ்த்தாமல் ஓயமாட்டேன் என அமமுக தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்திருப்பது அதிமுக - பாஜக கூட்டணியில் புது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினக்கரன் அதிமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பீர் கம்பெனியை அரசு பேருந்துகளில் விளம்பரப்படுத்துவதாக அதிமுகவைச் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தலின்போது அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை, தனித்தே சமத்துவ மக்கள் கட்சி களம் காண தயாராக இருக்கிறது என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மற்றும் அதிமுகவின் ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சி என்று முந்தைய தேர்தல்களின்போது பிரச்சாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இப்போது ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் திட்டங்களை கொண்டுவர அண்ணாமலை பாதயாத்திரை செல்வதாக கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தை யாராலும் முடக்க முடியாது என்றும், அலுவல்கள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு பாஜகவின் துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.