தேசிய தலைநகரில் COVID-19 நோய்த்தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாலும், நேர்மறை விகிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டதாலும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கம் சில ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறது.
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக குடும்ப உறுப்பினர்களை இழந்த குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் நிதி இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
டெல்லியில் ஆக்ஸிஜன் நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்காக, அரசாங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆக்ஸிஜன் செறிவு வங்கிகளை அமைத்து, COVID-19 நோயாளிகளுக்கு வீட்டு வாசலில் ஆக்ஸிஜனை வழங்குவதாக உறுதியளித்ததாக டெல்லி முதல்வர் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று காரணமாக ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் உயிர் இழந்தால், அக்குடும்பத்துக்கு ஆஆப் அரசாங்கம் நிதி உதவி அளிக்கும் என்ற மிகப்பெரிய அறிவிப்பை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
கொரோனா வைரஸின் மூன்றாவது அலைக்கு தனது அரசாங்கம் தயாராகி வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக டெல்லிக்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன என்றும் அவர் மத்திய அரசிடம் கோரியுள்ளார்.
மத்திய அரசிடமிருந்து புதன்கிழமை 730 டன் ஆக்ஸிஜன் சப்ளை கிடைத்ததற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசு, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்தார்
டெல்லியில் உள்ள அனைத்து ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு தில்லி அரசு தலா ரூ .5000-ஐ வழங்கும், 2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் திரு.அஜய் மாகேன் (Ajay Maken), மத்திய அரசை குறை சொல்லும் அதே நேரத்தில், COVID-19 தொற்றுநோய்களின் போது மக்கள் நலனிற்காக குறைந்தபட்சம் ஏதேனும் செய்ய வேண்டும் என்றார்.
செவ்வாயன்று காலை வெளியிடப்பட்ட சுகாதாரத் துறை தரவுகளின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். 1,761 பேர் தொற்றின் தாக்கத்தால் இறந்தனர்.
புதன்கிழமையன்று தில்லியில் ஒரே நாளில் 17,282 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 104 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்தியாவில் புதன்கிழமை COVID-19 நோய்த்தொற்று காரணமாக 1,033 பேர் இறந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.