சசிகலா பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம் அணியினருக்கு அனுப்பி இருந்தது. இதற்கான பதிலை ஓ பன்னீர்செல்வம் அணியினர் இன்று வழங்குகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது கட்சி விதிகளின்படி செல்லாது, எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எம்.பி., மைத்ரேயன் தலைமையில் டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்து இருந்தனர்.
இதையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்த நோட்டீசுக்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த வாரம் பதில் அளித்து இருந்தார். ஆனால் இந்த பதிலை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து அவர் சட்டசபை உறுப்பினராக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. பொதுவாக காலியாகும் தொகுதிக்கு அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, ஆர்.கே.நகர் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தமிழகத்தில் வரும் மே மாதம் 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ம் தேதி தொடங்குகிறது. 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
சமாஜ்வாதியின் சின்னமான சைக்கிள் சின்னம் யாருக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக நிரூபிக்க வேண்டும் என முலாயம்சிங் மற்றும் அகிலேசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள நிலையில், உ.பி.,யில் சட்டசபை தேர்தல் குறித்த சர்வே முடிவுகளை இந்தியா டுடே ஆக்சிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் பா.ஜ.,வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி டெல்லியில் இன்று அறிவித்தார்.
சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னத்தை தங்களுக்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்க அகிலேஷ் யாதவ் ஆதரவு தலைவருமான, ராஜ்யசபா எம்.பி.யுமான ராம் கோபால் யாதவ் இன்று தேர்தல் ஆணையம் செல்கிறார்.
அரசியல் கட்சிகள் பெயர் கூறாதவர்களிடம் இருந்து 2000 ரூபாயிக்கு மேல் நிதிபெற தடைவிதித்து சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆதாயம் தரும் பதவி வகிப்பதால் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 27 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என கோரி புதிய மனு ஒன்று, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டு ள்ளது.
27 ஆம் ஆத்மி எம்எல்ஏ- க்கள் ஆதாயம் தரும் பதவிகளை வகிப்பதாக அவர்களுக்கு எதிராக ஜூன் மாதம் ஜனாதிபதியிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு கடந்த மாதம் ஜனாதி பதி மாளிகை மூலம் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே காலியான இடங்களுக்கு ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் மே 24-ம் தேதி தொடங்குகிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.
அதிமுக நான்கு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் 3 இடங்களில் அதிமுக எளிதாக வெற்றி பெறும். 4-வது வேட்பாளருக்கும் போட்டி இருக்கும் என தெரிகிறது.
தழகத்தில் இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக 73.76 சதவீதம் வாக்குப்பதிவானது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு 5 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. வாக்கு பதிவு 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மக்கள் நீண்ட வரிசைகளில் வாக்குச் சாவடிக்கு வெளியே நின்டிருந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.