யாருடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என கூறி தமிழகம் - புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து களம் காண தயாராகவுள்ளது சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி.
பாடகி சின்மயி விவகாரத்தில் சீமானை குறித்து "இது ஆதிக்க மனோபாவம் நிறைஞ்ச, அவமரியாதை கொண்ட பெண்களை இழிவாக எண்ணும் முட்டாள்தனம்" என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.
சமூக போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி `டிராபிக் ராமசாமி' என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது. தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாகவும், அவதூராக பேசியதாகவும் நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார்.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜக-வின் தேசிய செயலாளர் H. ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது இந்த கருத்துக்கு எதிராக தமிழக தலைவர்கள் ஒன்று கூடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
திரிபுராவை தொடர்ந்து தமிழகத்தில் பெரியாரின் சிலையை அகற்ற வெகுநாட்கள் இல்லை என H.ராஜா ட்விட்டரில் பதிவிட்டது அவரின் சொந்த கருத்து என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்!
சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கத்தினை அனுப்பி காயம்பட்டிருக்கிற அம்மண்ணின் மக்களைக் காக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.