அதிகாரப்பகிர்வை பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு எதிராக நடைமுறைப்படுத்த முடியாது என ராஜபக்சே கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் - தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வசித்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள அதிமுக சார்பாக சந்திரசேகர் போட்டியிட்டார்.
பாராளுமன்றத் தேர்தலோடு 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்!
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் கடந்த மே 28 அன்று நடத்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் தூத்துக்குடி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஜிக்னேஷ் மேவானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று தூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்று சந்தித்த கட்சி தலைவர்களான ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன், கே.பால கிருஷ்ணன், கமல்ஹாசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு!
தமிழகத்திற்கு எதிராக அனைத்துத் துறைகளையும் காவி மயமாக்க முயலும் பாஜக அரசிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற சபதமேற்போம் என திமுக செயல்தலைவர் MK ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியாது என்றும் தற்போது இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகார் ராவ் கூறியதாகவும் திருமாவளவன் இன்று கூறியுள்ளார்.
எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சில எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்ற தாகலும், அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் தங்கியுள்ளதாலும் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் எடப்பாடி அரசு தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.