90s கிட்ஸ் தவிர்க்கவும் : 67 வயது ரோமியோவுக்கு 5ஆவது திருமணம் - 10 குழந்தைகள், 40 பேரக்குழந்தைகள்!

பாகிஸ்தானில் 67 வயதானவரின் இரு மகள்களும், தனது தந்தைக்கு 5ஆவது திருமணத்தை செய்து வைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - Sudharsan G | Last Updated : Oct 1, 2022, 03:17 PM IST
  • சௌகாத்திற்கு மொத்தம், 10 குழந்தைகள், 40 பேரக்குழந்தைகள்.
  • சௌகாத்தின் 5ஆவது திருமணத்திற்கு முன்பு அவரின் 8 பிள்ளைகளுக்கும் திருமணமாகிவிட்டது.
  • அவரின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 62.
90s கிட்ஸ் தவிர்க்கவும் : 67 வயது ரோமியோவுக்கு 5ஆவது திருமணம் - 10 குழந்தைகள், 40 பேரக்குழந்தைகள்!

வாழ்க்கையில் பலருக்கும் ஒரு வாழ்க்கை துணையை தேர்வுசெய்வது என்பதே மிகவும் கடினமாக இருக்கிறது. அதுவும் தனக்கு ஏற்றவரை தேர்வுசெய்ய பலரும் தனது வாழ்க்கை முழுவதும் தேடி வருகின்றனர். ஆனால், பாகிஸ்தானைச் சேர்ந்த சௌகத் தனது 67 வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்தது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது, அவருக்கு 10 குழந்தைகள், 40 பேரக்குழந்தைகள் என அவரது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 62 ஆக உள்ளது. 

கடந்தாண்டு மார்ச் மாதத்தில் பாகிஸ்தான் பெண் யூ-ட்யூபர் ஒருவர், சௌகத்தை எடுத்த நேர்காணல் ஒன்று தற்போது வைரல் ஆகிறது. சௌகாத்தின் 5ஆவது திருமணத்திற்கு முன்பு, அவரின் எட்டு மகள்களுக்கும், 1 மகனுக்கும் திருமணமாகியிருந்தது. மேலும், தான் தனியாக கூடாது என்பதற்காக தனது இரண்டு மகள்களும் 5ஆவது மற்றும் கடைசி முறையாக செய்துகொள்ளும்படி கூறியதாக சௌகாத் கூறியுள்ளார். 

அடம் பிடித்த மகள்கள்...

மேலும் படிக்க | மூன்றாவது மார்பகம் இருப்பது அழகா அசிங்கமா? இதற்காக அறுவைசிகிச்சை செய்து கொண்ட பெண்

சௌகாத் தனது இரண்டு மகளுக்கும் ஒரே திருமணம் செய்துவைத்து, அப்போதே தனது 5ஆவது திருமணத்தையும் செய்துள்ளார். மேலும், சௌகாத்தை திருமணம் செய்வது குறித்து மணப்பெண்ணிடம் கேட்டதற்கு, மிகவும் மகிழ்ச்சி என்றும் வழக்கத்தை விட இவ்வளவு பெரிய குடும்பத்துடன் இணைவது சந்தோஷமாக உள்ளது என்றும் கூறினார். 

குடும்பத்தினர் 62 பேரும் ஒரே வீட்டில் இருப்பதால், மொத்தம் எத்தனை சப்பாத்திகள் ஒரே வேளைக்கு தேவைப்படும் என பேட்டி எடுத்தவர் கேட்க,"ஒரு நபர் 2 சப்பாத்திகளை சாப்பிட்டாலும் 124 சப்பாத்திகள் தேவைப்படும்" என சௌகாத் பதிலளித்தார். 

53ஆவது திருமணம் 

பாகிஸ்தானின் சௌகத்தை போன்றுதான், சௌதி அரேபியாவை சேர்ந்த அபு அப்துல்லா என்பவரும் தனது 63ஆவது வயதில், 53ஆவது திருமணத்தை செய்தார். அப்போது அபு அப்துல்லா கூறியதாவது,"முதல் முறை திருமணம் செய்யும்போது எனக்கு இரண்டாவது திருமணம் செய்ய விருப்பமில்லை. திருமணம் செய்துகொண்டு பிள்ளைகளை பெற்றது என நன்றாகதான் இருந்தது. ஆனால், என்னை விட 6 வயது குறைவான எனது மனைவியுடன் தொடர்ந்து பிரச்சனை வந்தது. எனவே, இரண்டாவது திருமணத்தை செய்தேன்" என்றார். 

பின்பு, இரண்டு மனைவிகளும் ஒரே இடத்தில் இருந்ததால்,  இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை வந்ததாகவும், அதன்பின்பு, அவர்கள் இருவரையும் விவாகரத்து செய்துவிட்டு வேறு இரண்டு பெண்களை தான் திருமணம் செய்ததாகவும் அவர் கூறினார். இதுவே, தொடர்ந்து நடக்க அபு தற்போது, 53ஆவது திருமணத்திற்கு வந்துள்ளார். சௌகாத், அபு ஆகியோர் மீண்டும் மீண்டும் தனது வாழ்க்கை துணையை தேடிக்கொண்டே இருக்கும் நிலையில், இங்கு பலரும் தனது முதல் துணையே இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க |கணவருடன் செக்ஸ் லைப் எப்படி இருக்கு... அந்தரங்கத்தை பகிர்ந்த பிரபலத்தின் மனைவி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News