கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தொடர்ந்து காட்டுத்தீ போல் பரவி வருகிறது. சீனாவில் ஏசி உணவகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவருடன் சேர்ந்து சாப்பிட்ட 9 பேருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இது ஏசி காற்றுவழியாக பரவியதாக கூறப்படுகிறது.
சீனாவின் குவாங்சோவில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு குடும்பம் உணவருந்திக் கொண்டிருந்தது. அந்த குடும்பம் வுஹானில் இருந்து வந்திருந்தது, அவர்களில் ஒருவருக்கு அவர் அறியாமல் கொரோனா பாதிப்பு இருந்தது. இந்த வைரஸ் உணவகத்தில் உள்ள ஏர் கண்டிஷனர் குழாய் வழியாக பயணித்து, ஒருவருக்கொருவர் அருகில் அமர்ந்திருந்த மூன்று குடும்பங்களுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. உணவகத்தில் உணவருந்திய ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கி உள்ளது. உணவகத்தின் மற்ற 73 கிளை உணவகங்களும் ஊழியர்களும் பாதிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் ஜனவரி 24 ஆம் தேதி நடந்தது. 63 வயதான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளை உருவாக்கிய பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பின்னர் அவர் கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்தார்.
இதற்கிடையில், COVID-19 காரணமாக வுஹானின் இறப்பு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை விட 50% அதிகம் என்று சீனா கூறியுள்ளது. இப்போது, 1,290 இறப்புகள் 2, 579 என்ற அசல் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. வுஹானில் வசிப்பவர்கள் வுஹானில் உண்மையான இறப்பு எண்ணிக்கை அரசாங்கம் அறிவித்ததை விட அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர்.