டைட்டன் நீர் மூழ்கி கப்பல் பாகங்களில் மனித எச்சங்கள்.. நிபுணர்கள் அளித்த தகவல்!

கடலுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட சேதமடைந்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளில் மனித எச்சங்கள் இருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 29, 2023, 03:53 PM IST
  • ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன் மூலம் இயக்கப்படும் டைட்டன் நீர்மூழ்கி கப்பல்.
  • ஜூன் 18ஆம் தேதி காலை 111 ஆண்டுகள் பழமையான டைட்டானிக் கப்பல் இடிபாடுகளை பார்க்க புறப்பட்ட கப்பல்.
  • டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்தவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
டைட்டன் நீர் மூழ்கி கப்பல் பாகங்களில் மனித எச்சங்கள்.. நிபுணர்கள் அளித்த தகவல்! title=

வாஷிங்டன்: கடலுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட சேதமடைந்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளில் மனித எச்சங்கள் இருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது. புதனன்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், கடலோர காவல்படையானது 'M/V Horizon Arctic (ஒரு நங்கூரம் கையாளும் கப்பல்) நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள செயின்ட் ஜான்ஸுக்கு வந்த போது டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள கடல் தளத்திலிருந்து கப்பலின் உடைந்த பாகங்கள் மற்றும் ஆதாரங்களை மீட்டெடுத்தது' என தெரிவித்துள்ள்ளது.

மேலும், 'சர்வதேச கூட்டாளர் புலனாய்வு அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பிறகு, மரைன் போர்டு ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எம்பிஐ) அமெரிக்காவில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு ஆதாரங்களை கொண்டு செல்ல உத்தேசித்துள்ளது. அங்கு எம்பிஐ அதை ஆய்வு செய்து சோதனை நடத்தும். அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் இடிபாடுகளில் உள்ள மனித எச்சங்களை ஆய்வு செய்வார்கள் என்று கடலோர காவல்படை கூறியது. "இந்த முக்கியமான ஆதாரங்களைப் பெறவும் பாதுகாக்கவும் ஒருங்கிணைந்த சர்வதேச தேவை," என்று MBI தலைவர் கேப்டன் ஜேசன் நியூபாவர் அந்த அறிக்கையில் மேற்கோள் காட்டினார். 

பேரழிவு ஏற்பட்டதற்கான காரணங்களை புரிந்து கொள்ளவும், இதுபோன்ற ஒரு சோகம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் சான்றுகள் உதவும். இதற்கிடையில், டைட்டன் நீழ் மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்களை வைத்திருக்கும் நிறுவனமான பெலாஜிக் ரிசர்ச் சர்வீஸ், தற்போதைக்கு கடல் வேலைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக தெரிவித்தார். செயின்ட் ஜான்ஸில் உள்ள கனடா கடலோர காவல்படை வார்ஃபில் ஹொரைசன் ஆர்க்டிக்கால் எடுக்கப்பட்ட இடிபாடுகளில் ஒரு வெள்ளை பேனல் போன்ற ஒரு துண்டு மற்றும் வெள்ளை தார்பாலின் சுற்றப்பட்ட கயிறுகள் மற்றும் கம்பிகள் கொண்ட அதே அளவிலான மற்றொரு துண்டு இருந்தது. ஆனால் அது என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை.

மேலும் படிக்க | டைட்டானிக் கப்பலைப் போலவே விபத்துக்குள்ளான நவீன நீர்மூழ்கிக் கப்பல்! 5 பேர் பலி

ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன் மூலம் இயக்கப்படும் டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மற்றும் அதன் ஐந்து பயணிகளும் ஜூன் 18ஆம் தேதி காலை 111 ஆண்டுகள் பழமையான டைட்டானிக் கப்பல் இடிபாடுகளை பார்க்க புறப்பட்டது. டைட்டானிக் கப்பலை பார்க்க ஐந்து பேருடன் சென்ற சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் ஜூன் 18 அன்று காணாமல் போனது. அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர். டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகளைக் காணச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்தவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

டைட்டானிக் அருகே தேடுதல் வேட்டையாடியவர்கள் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவைக் கண்டுபிடித்ததாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனம் (ROV) டைட்டானிக்கிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் கடல் தளத்தில் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் ஒரு பகுதியைக் கண்டுபிடித்தது.

ஜூன் 22 அன்று, அமெரிக்க கடலோர காவல்படை, நீர்மூழ்கி கப்பலில் வெடிப்பு ஏற்பட்டதாக அறிவித்தது, ஒருவேளை கப்பலில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறியது. டைட்டானிக் கப்பலில் இருந்து சுமார் 1,600 அடி தொலைவில் நீர்மூழ்கிக் கப்பலின் வால் கூம்பு மற்றும் பிற பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல் OceanGate Expeditions நிறுவனத்திற்குச் சொந்தமானது. ஆழ்கடல் ஆய்வுக்காக மனிதர்களைக் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புகிறது. டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைப் பார்க்க செல்லும் சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா அழைத்துச் செல்லும் இந்த நிறுவனம், இதற்காக $250,000 கட்டணம் வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | அட்லாண்டிக் கடலில் காணாமல் போன Titanic நீர்மூழ்கி கப்பல்... இன்னும் சில மணி நேரங்கள் தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News