Internet safety: ஆபாச தள கண்காணிப்பிற்கு இனி கிரெடிட் கார்டு விவரங்கள் உதவும்

ஆபாச தளங்களைப் பயன்படுத்துவதற்கு கிரெடிட் கார்டு விவரங்கள் வழங்கப்பட வேண்டும்; பாதுகாப்புக்காக மாறும் இணையதள சட்டங்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 9, 2022, 09:54 AM IST
  • ஆபாச தள கண்காணிப்பு தீவிரம்
  • கிரெடிட் கார்டு விவரங்கள் மூலம் பாதுகாப்பான இணையதள அணுகல்
  • வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை குழந்தைகள் அணுகாமல் இருக்க நடவடிக்கை
Internet safety: ஆபாச தள கண்காணிப்பிற்கு இனி கிரெடிட் கார்டு விவரங்கள் உதவும் title=

லண்டன்: உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆபாச தளங்களை (Porn Website) அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இந்த இணையதளங்கள் சிறார்களை உள்ளடக்கத்தைப் பார்க்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தாலும், அது போதுமானதாக இல்லை. 

இந்த சூழ்நிலையில், எந்த வயதினர் இந்த தளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிவது மிகவும் கடினமாகிறது. 

எனவே இங்கிலாந்து அரசு புதிய ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவை (Online Safety Bill) அறிவித்துள்ளது. இதன்படி, ஆபாசப் படங்களை வழங்கும் இணையதளங்கள் பயனர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும்.

வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை குழந்தைகளின் அணுகலில் இருந்து அகற்றுவதே முன்னுரிமை என இங்கிலாந்து கூறுகிறது.

பாதுகாப்பான இணைய தினத்தை முன்னிட்டு, இங்கிலாந்து அரசின் டிஜிட்டல், மீடியா, கலாச்சாரம் மற்றும் விளையாட்டுத் துறை (DCMS), புதிய விதிகளை அறிவித்தது. 
இந்த விதிகள் மூலம் வயதுக்குட்பட்ட குழந்தைகள் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை அணுகுவதைத் தடுக்க அரசாங்கம் விரும்புகிறது.

ALSO READ | இணையத்தை பாதுகாப்பாக கையாள்வது எவ்வாறு?

கடன் அட்டை விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும்
வயது சரிபார்ப்புக்கு, பயனர்கள் தங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை வழங்க வேண்டும் அல்லது மூன்றாம் தரப்பு சேவை மூலம் தங்கள் வயதைச் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

இந்த நடவடிக்கையை எடுக்கத் தவறிய இணையதளங்களுக்கு அவர்களின் உலகளாவிய வணிகத்தின் மொத்தத்தொகையில் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று புதிய விதிகள் கூறுகின்றன.

நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் 
ஆன்லைன் பாதுகாப்பு மசோதா அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திலிருந்து பயனர்களைப் பாதுகாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் கிறிஸ் பிலிப்ஸ், ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் இதுபோன்ற ஆன்லைன் உள்ளடக்கத்தைப் பார்ப்பதிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறார்கள் என்று தெரிவித்தார்.

ALSO READ | கூகுளில் ஹேக்கர்கள் ஆபத்து அதிகம் - எச்சரிக்கும் மத்திய அரசு

மசோதா 
அனைத்து ஆபாச தளங்களுக்கும் பொருந்தும் வகையில் இந்த ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவை நாங்கள் மேலும் வலுப்படுத்துகிறோம், இதன் மூலம் இணையத்தை குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றும் எங்கள் இலக்கை அடைய முடியும் என்று அவர் கூறினார். 

புதிய சட்டப்பூர்வ கடமையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை முடிவு செய்வது இணைய தள நிறுவனங்களின் பொறுப்பு என்றும் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை குழந்தைகள் அணுகாமல் இருக்க நடவடிக்கை  எடுப்பது அவசியம் என்றும் அரசாங்கம் கருதுகிறது.

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த மசோதா மாற்றப்பட்டுள்ளது
பயனர் தரவைக் கையாளும் Ofcom நிறுவனங்களுக்கு வயது சரிபார்ப்புத் தொழில்நுட்பங்களின் அதிகரித்து வருவதைப் பயன்படுத்த பரிந்துரைக்கலாம் என்று அரசாங்கம் கூறியது.

எதிர்காலத்தில் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் இந்த மசோதா காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.

ALSO READ | Mystery: காணாமல் போனதாகக் கருதப்படும் உலகின் ‘5’ மர்ம தீவுகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News