ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள மசார்- ஐ- சரீப் நகரத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆப்கான் வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-
“ மசார் ஐ சரிப் நகரத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Strongly condemn the cowardly terror attack in Mazar-i-sharif. Our prayers and condolences to the familes who lost loved ones.
— Narendra Modi (@narendramodi) April 22, 2017