தமிழகத்தின் நிவாரணப் பொருட்கள் விரைவில் இலங்கை மக்களுக்கு விநியோகம்

தமிழகத்தின் நிவாரணப் பொருட்கள் விரைவில் இலங்கை மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 23, 2022, 10:41 AM IST
  • இலங்கைக்கு தமிழகத்தின் நிவாரணப் பொருட்கள்
  • விரைவில் இலங்கை மக்களுக்கு விநியோகிக்கப்படும்
  • தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த இலங்கை அரசு
தமிழகத்தின் நிவாரணப் பொருட்கள் விரைவில் இலங்கை மக்களுக்கு விநியோகம் title=

கொழும்பு: தமிழக அரசு அனுப்பிய 45 கோடி ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் கையளிப்பு - எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த 18ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட 45 கோடி ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்கள், இலங்கை கொழும்பு துறைமுகத்தை இன்று (22) மாலை சென்றடைந்தது.

அவற்றை, கொழும்பில் உள்ள இந்திய ஹை-கமிஷனர் கோபால் பாக்லே, இலங்கை பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பிரதமர் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க | இலங்கை மக்களின் வாகனம் மற்றும் உணவுக்கான நீண்ட காத்திருப்பு க்யூ

முன்னதாக, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பாக நிவாரண பொருட்களின் முதல் தவணை அனுப்பி வைக்கப்பட்டது.

40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 137 வகையான மருந்து பொருட்கள் என 136 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

9,000 மெட்ரிக் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் ஆவின் பால்பவுடர் மற்றும் 24 மெட்ரிக் டன் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் நிவாரண தொகையில் அடங்குகின்றன.

மேலும் படிக்க | முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி கூறிய இலங்கை பிரதமர்

இலங்கைக்கு தமிழக அரசு நிவாரண பொருட்களை அனுப்பிவைக்க மத்திய அரசும் அனுமதி அளித்தது. முதற்கட்டமாக ரூ.8.87 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய மருத்துவ பொருட்கள், கடந்த 18-ம் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

'தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன்' எனும் வாசகம் அச்சிடப்பட்ட மூட்டைகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் படிக்க | 'தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்' - இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர்!

இந்த நிவாரணப் பொருட்கள் இலங்கையைச் சென்றடைந்தன. இதனைத் தொடர்ந்து, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். 

அடுத்த கட்டமாக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வரும் 24, 28 மற்றும் 31ம் தேதிகளில் 3 தவணைகளாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

மேலும் படிக்க | இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை; ரணில் நடத்திய முக்கிய ஆலோசனை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News