அட்லாண்டிக் கடலில் காணாமல் போன Titanic நீர்மூழ்கி கப்பல்... இன்னும் சில மணி நேரங்கள் தான்...!

டைட்டானிக் சிதிலமடைந்த பகுதிகளைக் காணச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகியுள்ள நிலையில், கப்பலில் உள்ளவர்களுக்கு 7 மணி நேரத்துக்கும் குறைவான ஆக்சிஜன் மட்டுமே உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 22, 2023, 03:37 PM IST
  • டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் காணமல் போனது’
  • 5 பயணிகள் பயணித்த கப்பலில் சில மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே எஞ்சியுள்ளது.
  • கப்பலை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அட்லாண்டிக் கடலில் காணாமல்  போன Titanic நீர்மூழ்கி கப்பல்... இன்னும் சில மணி நேரங்கள் தான்...! title=

டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகளைக் காணச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகியுள்ள நிலையில், அதைத் தேடும் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் டைட்டானிக் கப்பல் மூழ்கியது. டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகளை ஒரு நீர்மூழ்கிக் கப்பல் அழைத்துச் சென்று வருகிறது. டைட்டானிக் கப்பலில் ஐந்து பேருடன் புறப்பட்டு சென்ற நிலையில், கப்பலில் ஆக்சிஜன் சப்ளை தீர்ந்து போக இன்னும் 7 மணி நேரம் மட்டுமே உள்ளதால், பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, கனடா, பிராண்ச் நாட்டைச் சேர்ந்த உள்ள மீட்புக் குழுவினர் இணைந்து, டைட்டானிக் கப்பலின் சிதைவுக்கு அருகில் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடி வருகின்றனர்.

அமெரிக்க கடலோர காவல்படை, கனடா இராணுவ விமானங்கள், பிரெஞ்சு கப்பல்கள் மற்றும் தொலைநோக்கி ரோபோக்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை டைட்டானிக் கப்பலின் சிதைவுக்குச் செல்லும் போது காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிக்க போராடி வருகின்றன.

அமெரிக்க கடலோர காவல்படை மீட்பு பணி குறித்து கூறுகையில், நீர்மூழ்கிக் கப்பலில் இருப்பவர்களிடம் 7 மணி நேரத்திற்கும் குறைவான ஆக்ஸிஜன் மீதம் உள்ளது. இதன் விளைவாக மீட்புப் பணியாளர்கள் 24 மணி நேரமும் உழைத்துள்ளனர். அவசரகாலத்தில் 96 மணிநேரம் ஆக்சிஜன் சப்ளை செய்யும் வகையில் டைட்டன் நீர் மூழ்கி கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்களும் குறைவாகவே உள்ளது. அட்லாண்டிக் கடலில் 3,800 மீட்டர் ஆழத்தில் அந்த கப்பலில் சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருக்கும் நிலையில், அதைக் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

காணாமல் போன கப்பலில் இருந்த ஐந்து பேரில் பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தான் அதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் ஆகியோர் அடங்குவர். அந்த டைட்டன் நீர் மூழ்கிக் கப்பல் சில நாட்களுக்கு முன்பு, கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே அத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதைத் தேடும் பணிகள் தான் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு நிமிடமும் ரொம்பவே முக்கியம் என்பதால் மீட்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். நீர்மூழ்கிக் கப்பல் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிய 24 மணி நேரமும் தேடி வருகின்றனர்.

டைட்டன் கப்பலைத் தேடும் சோனார் திறன்களைக் கொண்ட கனடா விமானம் புதன்கிழமை ஒலி எழுப்பிய நிலையில், மேலும் தொலைவிலிருந்து இயக்கப்படும் வாகனங்கள் சத்தம் தோன்றிய பகுதிக்கு நகர்த்தப்பட்டன. சிறிய சுற்றுலாக் கப்பலில் இருந்த பயணிகள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை இந்த ஒலிகள் கொடுத்துள்ளன. இருப்பினும் நிபுணர்களால் அதற்கான ஆதாரத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.

மேலும் படிக்க | குடித்து விட்டு விமானம் ஓட்ட தயாரான விமானி... கைது செய்த போலீஸ்.

"நீங்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் இருக்கும்போது, இது போன்ற விஷயங்கள் நம்பிக்கை கொடுக்கின்றன. குறிப்பாக சப்தங்களைப் பொறுத்தவரை, அவை என்னவென்று எங்களுக்குத் தெரியாது. இப்போது ஒன்றும் சொல்ல முடியாது என்பது தான் உண்மை நிலை," என்கிறார் கடலோர காவல்படை கேப்டன் ஜேமி பிரடெரிக். 

மேலும், தற்போது வெளியான ஒரு தகவலில், 2018 ஆம் ஆண்டில் நீரில் மூழ்கக்கூடிய கப்பலைப் பற்றிய பாதுகாப்புக் கவலைகளை வல்லுநர்கள் எழுப்பினர். இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்குப் பாதுகாப்பானது என்ற சான்றிதழ் வழங்கவே ஓசன்கேட் அமைப்பு தயங்கியதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | ஜெனின் நகரில் தீவிரமாகும் மோதல்! இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் 4 பாலஸ்தீனியர்கள் பலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News