ட்விட்டர் CEO ஜேக் டார்ஸி ராஜினாமா; புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் நியமனம்

பராக் அகர்வால் மும்பை ஐஐடியில் பயின்ற பின்னர் ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் ஆராய்ச்சி (PhD) கல்வி பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 30, 2021, 06:41 AM IST
ட்விட்டர் CEO ஜேக் டார்ஸி ராஜினாமா; புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் நியமனம்

ட்விட்டர் சிஇஓ பதவியை ஜேக் டார்ஸி (Jack Dorsey) ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக தொழில்நுட்ப தலைவராக இருந்த பரக் அகர்வால் (Parag Agrawal) தலைமை செயல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பராக் அகர்வால் மும்பை ஐஐடியில் பயின்ற பின்னர் ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் ஆராய்ச்சி (PhD) கல்வி பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

ட்விட்டர் நிறுவனமே இதனை அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில்,  இதனைத் தொடர்ந்து ஜேக் டார்ஸியும் தனது ட்விட்டர் பக்கத்தில், இது குறித்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.

புதிய  செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் அக்ரவால் 2011ஆம் ஆண்டு அக்டோபரில் ட்விட்டர் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலையில் இணைந்தார். 

ALSO READ | Health Alert! புதிய கோவிட் மாறுபாடு Omicron பரவுகிறது! பயணக் கட்டுப்பாடுகள் அமல்

தன் மீது  நம்பிக்கை வைத்து ட்விட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ள பராக் அக்ரவால், இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு, நிறுவனத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜாக் டார்ஸி ட்விட்டர் நிறுவனத்தின் மீது சரிவர கவனம் செலுத்துவதில்லை எனக் கூறி,   2020 ஆம் ஆண்டு எலியட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஜேக் டார்ஸியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜேக் டார்ஸி ராஜினாமா செய்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ALSO READ | Omicron: ஒமிக்ரான் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்..!

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News