முதலில் கோழி வந்ததா... இல்லை முட்டை வந்ததா... விடையை கண்டுபடித்த விஞ்ஞானிகள்!

முதலில் முட்டை வந்ததா.. இல்லை  கோழி  வந்ததா என்ற இந்த கேள்வியை உங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே நீங்கள் கேட்டிருக்க கூடும்... ஆனால் அதற்கான விடை கிடைக்காமல் குழப்பம் நீடித்துக் கொண்டே தான் இருந்தது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 16, 2023, 05:03 PM IST
  • கோழியா அல்லது முட்டையா என்ற கேள்வியை யாரிடம் கேட்டாலும் எனக்கு தெரியாது என்னும் வகையில் ஏதாவது பதில் சொல்லி சமாளித்து விடுவார்கள்.
  • பல காலங்களாக கேட்டு வரும் இந்த கேள்விக்கான பதிலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • ஓவோக்லிடின் என்ற புரதம் கோழி முட்டையின் ஓட்டில் காணப்படுகிறது.
முதலில் கோழி வந்ததா... இல்லை முட்டை வந்ததா... விடையை கண்டுபடித்த விஞ்ஞானிகள்! title=

உலகில் முதலில் வந்த கோழியா அல்லது முட்டையா என்ற கேள்வியை உங்கள் குழந்தை பருவத்திலிருந்தே நீங்கள் கேட்டிருக்க கூடும். கோழி, முட்டை, கோழி, முட்டை... இப்படித் திரும்பத் திரும்ப மாற்றி மாற்றி கூறி வந்த நிலையில் .. ஆனால் தீர்வை எட்ட முடியவில்லை. அப்படியானால், உலகில் முதலில் வந்து எது என்ற கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க நாம் பல வகையான விவாதங்களைக் கடந்து வந்திருக்கிறோம். நம்மில் பலருக்கு மணிக்கணக்கில் விவாதம் செய்தும் பதில் கிடைக்கவில்லை. எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா என்ற இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் எனக்கு தெரியாது என்னும் வகையில் ஏதாவது பதில் சொல்லி சமாளித்து விடுவார்கள்.  வேற்று கிரக மனிதர்கள், பிரபஞ்சம் எப்படி உருவானது, பேய் இருக்கா இல்லையா, இறந்த பின் நடப்பது என்ன என்பதை போல் விடை தெரியாத பல கேள்விகளில் இதுவும் ஒன்று எனலாம்.

கேள்விக்கான பதிலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

ஆனால், பல காலங்களாக கேட்டு வரும் இந்த கேள்விக்கான பதிலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். டெய்லி எக்ஸ்பிரஸ் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், பிரிட்டனின் ஷெஃபீல்ட் மற்றும் வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் கோழி மற்றும் முட்டை பற்றிய இந்த கேள்வியை ஆழமாக ஆராய்ந்தனர். இந்த ஆய்வின் படி உலகில் முதலில் வந்தது முட்டை அல்ல கோழிதான். இந்த கேள்விக்கான காரணத்தை அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | அதிக விலைன்னா சாப்பிடாதீங்க... சிக்கன் விலை உயர்வு குறித்து பாக். அமைச்சர்!

கோழியின் கருப்பையில் தயாரிக்கப்படும் புரதம்

விஞ்ஞானிகள் இது குறித்து கூறுகையில், ஓவோக்லிடின் என்ற புரதம் கோழி முட்டையின் ஓட்டில் காணப்படுகிறது. இந்த புரதம் இல்லாமல் முட்டைகளை உற்பத்தி செய்ய முடியாது. இது மட்டுமின்றி, கோழியின் கருப்பையில் மட்டுமே இந்த புரதம் உற்பத்தியாகிறது என்றும், இந்த வகையில் கோழிதான் உலகிலேயே முதலில் வந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. Ovoclidin கோழியின் கருப்பையில் தயாரிக்கப்படும் ஒரு புரதம். பின்னர் இந்த புரதம் முட்டையின் ஓட்டை அடைகிறது.

விஞ்ஞானிகளின் ஆய்வு

விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு மற்றும் ஆராய்ச்சியில் உலகில் முட்டைக்கு முன் கோழி வந்தது என்று தெரிய வந்தது. இந்த நேரத்தில், கோழி எப்படி உலகில் உருவானது என்ற மற்றொரு கேள்வி இப்போது மக்களை சூழ்ந்துள்ளது. அந்த வகையில் இந்தக் கேள்வி இன்னும் தீர்க்கப்படாத புதிராகவே உள்ளது எனலாம்.

மேலும் படிக்க | 50 வயதில் 60 வது குழந்தை; அடுத்த ரிலீஸுக்கு மனைவியை தேடும் நபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News