UAE: திருமணத்துக்கு முன் பெண்களுக்கு இந்த சோதனை, தடுப்பூசிக்கான ஆலோசனை ஏன்?

UAE: உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, சர்விகல் புற்றுநோயானது உலகளவில் பெண்களுக்கு நான்காவது மிகவும் பொதுவான புற்றுநோயாக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 8, 2022, 07:10 PM IST
  • இந்தியாவைப் பற்றி பேசுகையில், சர்விகல் புற்றுநோய் பெண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாகும்.
  • சர்விகல் புற்றுநோயை விழிப்புணர்வு மூலம் கட்டுப்படுத்தலாம்.
  • முக்கிய அறிகுறிகள் வெள்ளைப்படுதல் மற்றும் கால்கள் மற்றும் எலும்புகளில் வலி ஆகியவையாகும்.
UAE: திருமணத்துக்கு முன் பெண்களுக்கு இந்த சோதனை, தடுப்பூசிக்கான ஆலோசனை ஏன்?

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஒரு வினோத வழக்கம் பலரை வியப்புக்குள்ளாக்கியுள்ளது. அங்கு பெண்கள் திருமணத்திற்கு முன்னர் ஒரு சோதனையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெண்கள் மற்றும் எதிர்காலத்தில் அவர்கள் உருவாக்கவுள்ள குடும்பங்களின் பாதுகாப்பிற்காக இந்த சோதனை அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அபுதாபி சுகாதார சேவை நிறுவனமான 'சேஹா' மூலம், பெண்கள் திருமணத்திற்கு முன்பு மனித பாப்பிலோமா வைரஸ் (எச்.பி.வி) தடுப்பூசியைப் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதே போல் இதற்கான பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் (சர்விகல் கான்சர்) அபாயம் குறைகிறது என கூறப்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

உலக சுகாதார அமைப்பின் அறிக்கை என்ன கூறுகிறது?
உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, சர்விகல் புற்றுநோயானது உலகளவில் பெண்களுக்கு நான்காவது மிகவும் பொதுவான புற்றுநோயாக உள்ளது. 2020 ஆம் ஆண்டில், 6,04,000 புதிய சர்விகல் புற்றுநோய் நோயாளிகள் பதிவாகியுள்ளன. மேலும் 3 லட்சத்து 42 ஆயிரம் பெண்கள் இதனால் இறந்துள்ளனர். எச்.பி.வி குறிப்பாக உடல் ரீதியான உறவுகளால் பரவுகிறது.  பெரும்பாலான மக்கள் பாலியல் செயல்பாடுகளுக்குப் பிறகுதான் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இந்த வைரஸால் மீண்டும் மீண்டும் தொற்று ஏற்படுவது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது.

சர்விகல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு தேவை
சர்விகல் புற்றுநோயை விழிப்புணர்வு மூலம் கட்டுப்படுத்தலாம் என்று சேஹா கூறுகிறது. அதைத் தடுப்பதற்கான மிக முக்கியமான வழி தடுப்பூசி ஆகும். 13 முதல் 26 வயதுடைய அனைத்துப் பெண்களும் எஹ்.பி.வி தடுப்பூசியைப் பெறுமாறு சேஹா வலியுறுத்தியுள்ளது. 'தடுப்பூசி மற்றும் ஆரம்ப ஸ்கிரீனிங் கருப்பை புற்றுநோயை அகற்றவும் குணப்படுத்தவும் உதவும். திருமணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பரிந்துரைக்கிறோம்.' என சேஹா தெரிவிதத்தாக கலீஜ் கூறியுள்ளது.  

மேலும் படிக்க | 1000 ஆண்டுகள் பழமையான பப் மூடப்பட்டது! காரணம் இதுதான்...

பாதிக்கப்பட்ட பெண் தன் கதையையும் கூறினார்
சேஹா அமைப்பு, யு.ஏ.இ பெண்களுக்கு தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க ஒரு பெண்ணின் கதையையும் கூறியுள்ளது. இந்த 28 வயது பெண்ணால் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியும் கர்ப்பம் தரிக்க முடியவில்லை. பின்னர் அவருக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. எனினும் சிகிச்சைக்கு பின் அந்த பெண் பூரண குணமடைந்துள்ளார். சர்விகல் புற்றுநோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்தால், அந்தப் பெண் போல பூரண குணமடையலாம் என்று யுஏஇயின் மதினாத் கலீஃபா ஹெல்த்கேர் சென்டரின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் ஷஹாத் பைசல் அல் அயாலா கூறினார்.

இந்தியாவிலும் பெரும் ஆபத்து உள்ளது
இந்தியாவைப் பற்றி பேசுகையில், சர்விகல் புற்றுநோய் பெண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாகும். இந்திய பெண்கள், தங்கள் கவனக்குறைவு காரணமாக ஆரம்ப நிலையில் மருத்துவரிடம் செல்வதில்லை. அவர்கள் மருத்துவர்களிடம் செல்வதற்குள் புற்றுநோய் ஒரு மேம்பட்ட நிலையை எட்டிவிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இறப்பு அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது. இந்த புற்றுநோய் மனித பாப்பிலோமா வைரஸால் உடலில் பரவுகிறது. இது உடலுறவு மூலம் பெண்ணின் உடலை சென்றடைகிறது. நல்ல விஷயம் என்னவென்றால், 90% நோயாளிகளில், இந்த வைரஸ் தொற்று தானாகவே அழிக்கப்படுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு 45 வயதிற்குப் பிறகு இந்தப் புற்றுநோய் வருகிறது.

அதன் அறிகுறிகள் என்ன?
மாதவிடாய் முடிந்த பிறகும் இரத்தப்போக்கு, உடலுறவுக்குப் பிறகு இரத்தப்போக்கு, அடிக்கடி தொற்றால் பாதிக்கப்படுவது மற்றும் சிறுநீர் கழித்த பிறகு எரியும் உணர்வு, மாதவிடாய் நின்ற பிறகு இரத்தப்போக்கு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். அதன் முக்கிய அறிகுறிகள் வெள்ளைப்படுதல் மற்றும் கால்கள் மற்றும் எலும்புகளில் வலி ஆகியவையாகும்.

மேலும் படிக்க | 'போராட்டத்தை நிறுத்த வேண்டும்': டிரக் ஓட்டுநர்களை சாடிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News