EPFO Wage Ceiling Hike: புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme) அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளது. இது அவர்களுக்கு பல வித நன்மைகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அரசு ஊழியர்களுக்கு தேவையான ஓய்வூதிய சீர்திருத்தங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது, தனியார் துறை ஊழியர்களுக்கும் நல்ல செய்தி வரக்கூடும் என தெரிகிறது.
EPFO: ஊதிய உச்சவரம்பை அதிகரிக்க முன்மொழிவு
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO -இன் கீழ் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய பங்களிப்பைக் கணக்கிடுவதற்கான ஊதிய உச்சவரம்பை (Wage Ceiling) அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு தொழிலாளர் அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் விரைவில் முடிவெடுக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொழிலாளர் அமைச்சகம், ஊதிய வரம்பை தற்போதைய ரூ.15,000 லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்த பரிந்துரைத்துள்ளது.
ஓய்வூதியம் மற்றும் இபிஎஃப் பங்களிப்புகளில் நேரடி தாக்கம் இருக்கும்
இபிஎஃப் பங்களிப்புக்கான (EPF Contribution) சம்பள வரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற முன்மொழிவு ஏப்ரல் மாதம் அனுப்பப்பட்டது என்றும் இது குறித்து விரைவில் நிதி அமைச்சகம் இறுதி முடிவை எடுக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. EPFO மூலம் நிர்வகிக்கப்படும் EPS எனப்படும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் (Employee Pension Scheme) ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான சம்பள வரம்பு செப்டம்பர் 1, 2014 முதல் ரூ.15,000 ஆக உள்ளது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள அதிகரிப்பு தனியார் துறை ஊழியர்களுக்கு மிகவும் தேவையான நிவாரணங்களையும் சிறந்த நன்மைகளையும் வழங்கக்கூடும்.
EPF பங்களிப்புகளில் தாக்கம்
ஊதிய வரம்பை 15,000 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக உயர்த்தும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், அது தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் EPF பங்களிப்புகளில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும்.
EPS Pension: EPS ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
- இபிஎஸ் ஓய்வூதியத்தை கணக்கிட ஒரு சிறப்பு சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது.
- EPS Pension Formula: உறுப்பினரின் மாதாந்திர ஓய்வூதியம் = ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் X ஓய்வூதியம் பெறக்கூடிய சேவைகாலம் / 70 (Member’s monthly pension = Pensionable salary X Pensionable service / 70).
- இங்கு சராசரி சம்பளம் என்பது ஊழியரின் 'அடிப்படை சம்பளம் (Basic Salary)' + 'அகவிலைப்படி (Dearness Allowance)’ ஆகும். மேலும், அதிகபட்ச ஓய்வூதிய சேவை காலம் 35 ஆண்டுகள் ஆகும்.
- இப்போது, தற்போதைய சம்பள வரம்பு (ஓய்வூதிய சம்பளம்) ரூ.15,000 ஆகும்.
- இந்த புள்ளிவிவரங்களைக் கொண்டு கணக்கிட்டால், தற்போதைய இபிஎஸ் ஓய்வூதியம் - 15,000 x 35 / 70 = ரூ 7,500 / மாதம்.
Monthly Salary: மாத சம்பளம் குறையுமா?
சம்பள வரம்பு 15,000 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக உயர்த்தப்பட்டால், ஊழியர்களுக்கு மாதம் 21,000 x 35/70 = 10,050 ரூபாய் ஓய்வூதியம் (Pension) கிடைக்கும். அதாவது, புதிய விதிகள் அமலுக்கு வந்தால், அதன் பிறகு ஊழியர்களுக்கு மாதா மாதம் ரூ.2550 கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும். எனினும், இதில் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். புதிய விதிகள் அமலுக்கு வந்த பின்னர், ஊழியர்களின் கையில் கிடைக்கும் ஊதியம், அதாவது, டேக் ஹோம் சேலரி (Take Home Salary) சிறிது குறையும். ஏனெனில் புதிய விதிகளை அமல்படுத்திய பிறகு, இப்போது செய்யப்படும் பிடித்தத்தை விட, ஒப்பீட்டளவில் இபிஎஃப் மற்றும் இபிஎஸ் ஆகியவற்றில் இருந்து அதிகப் பிடித்தம் செய்யப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ