Budget 2024 Announcement for Farmers : பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக என்டிஏ அரசு ஆட்சி அமைத்துள்ளது. மோடி 3.0 -இன் முதல் பட்ஜெட் தாக்கல் இன்று. நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தனது பட்ஜெட் உரையை அளித்து வருகிறார். தொடர்ந்து ஏழாவது முறையாக நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள், இளைஞர்கள், சிறுதொழிகள் என பல துறைகளுக்கான அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.
வேளாண் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம்:
இந்நிலையில் இன்று தாக்கால் செய்த பட்ஜெட்டில் வேளாண்துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி வேளாண் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மாநிலங்களின் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் மற்றும் அதை சார்ந்த திட்டங்களுக்கு 1.5 2 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்றும் பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம்:
அதனுடன் வேளாண் துறையில் டிஜிட்டல் பயன்பாடு அதிகரிக்கப்படும் என்று கூறிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் குறித்து டிஜிட்டல் முறையில் சர்வே மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி கடுகு, சூரிய காந்தி, பருப்பு வகைகள், நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கம் தரப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
2 ஆண்டுகளில் ஒரு கோடி:
இதனுடன் அடுத்த வரும் இரண்டு ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி பேரை இயற்கை வேளாண்மையில் ஈடுபடுத்தப்படுவரா்கள் எனவும் நிதி அமைச்சர் (FM Nirmala Sitharaman) தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
வேளாண் பங்குகள் உயர்வு:
இதனிடையே விவசாயிகளுக்கு அரசு பல பெரிய அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிட்தை அடுத்து தற்போது வேளாண் பங்குகளில் (Agri Stock) உயர்வு ஏற்பட்டுள்ளது. விவசாயத்தில் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும், உற்பத்தியை அதிகரிப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார். விவசாயத்தில் உற்பத்தியை அதிகரிக்க ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ