PM Awas Yojana: ஏழை மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக்கொடுக்கும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா எனப்படும் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் (PMAY) ஜூன் 25, 2015 அன்று தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் கிராமப்புற இந்தியாவிலும் நகர்ப்புறங்களிலும் செயலில் உள்ளது. கிராமப்புற இந்தியாவில், இது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா ரூரல் (PMAY-G) என்றும், நகரங்களில், இது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அர்பன் (PMAY-U) என்றும் அழைக்கப்படுகின்றது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் (Pradhan Mantri Awas Yojana) கீழ், அரசு வீட்டுக் கடன்களுக்கு மானியம் வழங்குகிறது. மானியத்தின் அளவு வீட்டின் அளவு மற்றும் வருமானத்தைப் பொறுத்தது. இந்த திட்டத்தின் கீழ், குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் வழங்க வங்கிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அதிகபட்ச கால அளவு 20 ஆண்டுகள் ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் PMAY திட்டத்தின் கீழ் 4.1 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
PM Awas Yojana: PMAY -க்கு யார் தகுதியானவர்கள்?
- இந்த திட்டத்தின் நன்மைகளை பெற வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
- இதற்கு இந்திய குடியுரிமை அவசியம்.
- விண்ணப்பதாரருக்கு சொந்த வீடு இருக்கக்கூடாது.
- விண்ணப்பதாரரின் ஆண்டு சம்பளம் 3 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம், அதற்கு மேல் இருக்கக்கூடாது.
- விண்ணப்பதாரர் ரேஷன் அட்டை பிபிஎல் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகள் (EWS), குறைந்த வருமானம் கொண்ட குழுக்கள் (LIG), மற்றும் நடுத்தர வருமான குழுக்கள் (MIG-I மற்றும் MIG-II) திட்டத்தால் வரையறுக்கப்பட்ட வருமான அளவுகோல்களின் அடிப்படையில் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்.
PM Awas Yojana: தேவையான ஆவணங்கள் என்ன?
- ஆதார் அட்டை
- பாஸ்போர்ட்
- வண்ண புகைப்படம்
- வேலை அட்டை
- ஸ்வச் பாரத் மிஷன் பதிவு எண்
- வங்கி பாஸ்புக்
- கைபேசி எண்
- வருமானச் சான்றிதழ்
PM Awas Yojana: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி
- அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும் - @pmaymis.gov.in/.
- முகப்புப் பக்கத்தில் கிளிக் செய்து, Pmavasyojana இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- Registration என்பதைக் கிளிக் செய்து, அனைத்து தகவல்களையும் நிரப்பவும்.
- அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்.
- பின்னர் submit விருப்பத்தை கிளிக் செய்யவும்.
PM Awas Yojana: ஆஃப்லைனில் விண்ணப்பிப்பது எப்படி
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க, அருகில் உள்ள பொது சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். விண்ணப்பிக்கும் போது, அடையாள அட்டை, முகவரிச் சான்று, வருமானச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சொத்து ஆவணங்கள் போன்ற சில ஆவணங்களும் தேவைப்படும் என்பதை நினைவில் கொள்க.
மேலும் படிக்க | உலகின் டாப் பணக்காரர்களில் எலோன் மஸ்க் நம்பர் 1: பட்டியலில் எவ்வளவு இந்தியர்கள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ