இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆதார் அட்டை புதுப்பிப்பை புதுப்பிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஆதார் (Enrolment and Update) விதிகளில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை UIDAI வெளியிட்டது. ஆதார் பதிவு அல்லது புதுப்பிப்பு நோக்கங்களுக்காக குடியுரிமை பெற்ற தனிநபர்கள் மற்றும் குடியுரிமை பெறாத தனிநபர்களுக்காக (NRIகள்) புதிய படிவங்களை UIDAIவெளியிட்டுள்ளது.
ஆதார் அட்டை
புதிய விதிகளின்படி, ஆதார் அட்டை வைத்திருப்பவர் இப்போது ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் ஆதார் பதிவில் உள்ள தகவலைப் புதுப்பிக்க முடியும். மத்திய அடையாள தரவு களஞ்சியத்திற்கான (CIDR) தகவல் புதுப்பிப்பை அருகிலுள்ள ஆதார் சேவா கேந்திரா மையத்திற்குச் சென்று மேற்கொள்ளலாம் அல்லது மொபைல் செயலி மற்றும் UIDAI இணையதளம் வழியாகச் செய்யலாம்.
2016 ஆண்டு விதிகளின்படி, ஆன்லைனில் முகவரிகளைப் மட்டுமே புதுப்பிக்க முடியும். இதர விவரங்களை மேம்படுத்த, ஆதார் எண் வைத்திருப்பவர் பதிவு மையத்திற்குச் செல்ல வேண்டும். புதிய விதிகளின்ன்படி, ஆதார் அட்டை வைத்திருப்பவர் மொபைல் எண்ணையும் ஆன்லைனில் புதுப்பிக்க முடியும் கூறப்படுகிறது.
ஆதார் அட்டை பதிவு செய்வதற்கான புதிய படிவங்கள்
ஆதார் பதிவு மற்றும் ஆதார் விவரங்களை புதுப்பிப்பு தொடர்பாக மாற்றப்பட்ட புதிய படிவங்கள் இவை.
படிவம் 1
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய, இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் குடியுரிமை இல்லாத நபர்கள் (இந்தியாவில் முகவரிக்கான ஆதாரம் உள்ளவர்கள்) ஆதார் பதிவுக்காக படிவம் 1ஐ பயன்படுத்தலாம். ஏற்கனவே ஆதார் அட்டை வைத்திருக்கும் தனிநபர் மற்ற விவரங்களைப் புதுப்பிக்க படிவம் 1ஐப் பயன்படுத்தலாம்
படிவம் 2
இந்தியாவிற்கு வெளியே முகவரி ஆதாரம் உள்ள NRI கள், படிவம் 2 பதிவு மற்றும் புதுப்பிப்புக்காக படிவம் எண் 2 பயன்படுத்தலாம்.
படிவம் 3
5 முதல் 18 வயதுக்கு இடைப்பட்டவர்களின் குழந்தைகளின் (குடியிருப்பு அல்லது இந்திய முகவரியைக் கொண்ட NRI) ஆதார் பதிவுக்கு படிவம் 3 பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | நாடு தற்போது ராமர் மயமாகி வருகிறது - ஆளுநர் ஆர்என் ரவி பேட்டி!
படிவம் 4
படிவம் 4 இந்தியாவிற்கு வெளியே உள்ள முகவரிகளைக் கொண்ட NRI குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படும்.
படிவம் 5
5 வயதுக்குட்பட்ட குடியுரிமை கொண்ட அல்லது NRI குழந்தைகள் (இந்திய முகவரியைக் கொண்டவர்கள்) ஆதாரில் பதிவு செய்வதற்கு அல்லது புதுப்பிப்பதற்குப் படிவம் 5ஐ பயன்படுத்த வேண்டும்.
படிவம் 6
5 வயதுக்குட்பட்ட NRI குழந்தைகள் (இந்தியாவிற்கு வெளியே முகவரி கொண்டவர்கள்) படிவம் 6 ஐ பயன்படுத்த வேண்டும்.
படிவம் 7
ஆதார் விவரங்களைப் பதிவு செய்ய அல்லது புதுப்பிக்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர் படிவம் 7ஐ பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டு பாஸ்போர்ட், OCI கார்டு, செல்லுபடியாகும் நீண்ட கால விசா, இந்திய விசா ஆகியவற்றின் விவரங்கள் இந்தப் பிரிவில் சேருவதற்குத் தேவைப்படும். மின்னஞ்சல் ஐடி கொடுப்பது அவசியம் ஆகும்.
படிவம் 8
18 வயதுக்குக் கீழ் வசிக்கும் வெளிநாட்டவர் படிவம் 8ஐ பயன்படுத்த வேண்டும்
படிவம் 9
18 வயதை அடைந்தவுடன் ஆதார் எண்ணை ரத்து செய்ய படிவம் 9ஐப் பயன்படுத்தலாம் என்று UIDAI அறிவித்துள்ளது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதார் அட்டையை புதுப்பிக்கவும்
ஆதார் எண்ணை வைத்திருப்பவர், ஆதார் எண் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் ஆவணங்கள் அல்லது தகவல்களைப் புதுப்பிக்கலாம்.
ஆதார் எண்ணை புதுப்பித்தல் UIDAI இன் இணையதளம் அல்லது மொபைல் விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட ஆன்லைன் படிவத்தில் அல்லது பதிவு மையத்தில் படிவத்தை சமர்ப்பிக்கலாம்.
ஆதார் அட்டை தொடர்பான முக்கியமான தகவல்கள்
புதிய படிவத்தின்படி, பிறந்த தேதிக்கான ஆவண ஆதாரம் இல்லாத தனிநபரின் வயது அவர் சொல்வதை ஏற்றுக் கொண்டு தோராயமாக ஏற்றுக்கொள்ளப்படும். எனவே ஆதார் அட்டையில் விண்ணப்பதாரர் குறிப்பிட்ட பிறந்த ஆண்டு மட்டுமே அச்சிடப்படும். நாள் மற்றும் மாதம் இடம் பெறாது. எனவே, ஆதார் அட்டையில் முழுமையான பிறந்த தேதியை அச்சிட விரும்புபவர்கள் அதற்கான ஆவணச் சான்றினை அளிக்க வேண்டும்.
ஆதார் பதிவு மற்றும் ஆதார் விவரங்களை புதுப்பித்தல் ஆகியவை ஆவண சரிபார்ப்பின் அடிப்படையில் செய்யப்படும். குடும்பத் தலைவரின் (HoF) உறுதிப்பாட்டின் அடிப்படையில் செய்யப்படும் முறையில் HoF தனது ஆதார் விவரங்களை அளித்து படிவம் 1-ல் கையொப்பமிட வேண்டும்.
NRI, இந்தியர் அல்லாத மொபைல் எண்ணை வழங்கினால், படிவம் 1 வழிகாட்டுதலின்படி, அதற்கு SMS செய்தி எதுவும் அனுப்பப்படாது. அதேபோல, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் மட்டுமே அடையாளச் சான்றாக (POI) ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உலகின் முதல் போர்டபிள் ஹாஸ்பிடல் ஆரோக்ய மைத்ரி க்யூப்! அயோத்தியில் அறிமுகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ