Income Tax Notice: பண பரிவர்த்தனைகளுக்கு பல வழிகள் உள்ளன. மக்கள் பல்வெறு பொருட்களை வாங்கவும், சேவைகளை பயன்படுத்திக்கொள்ளவும் பல பண பரிவர்த்தனைகளை செய்கிறார்கள். இவை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் செய்யப்படுகின்றன. இப்படிப்பட்ட பரிவர்த்தனைகளில் பயனர்கள் சில முக்கிய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். பயனர்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்வது வருமான வரித்துறையின் ரேடாரின் கீழ் வரலாம். வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேலான பரிவர்த்தனைகளை வருமான வரித்துறைக்கு (Income Tax Department) தெரிவிக்க வேண்டும். இதில் அனைத்து வகையான பரிவர்த்தனைகள் மற்றும் UPI, கார்டுகள், ரொக்க டெபாசிட்கள் மற்றும் குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பணம் எடுக்கப்படுவது போன்ற பரிவர்த்தனைகள் அடங்கும்.
வருமான வரித்துறையானது அறிவிக்கப்பட்ட வருமானம் மற்றும் செய்யப்பட்ட செலவுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் கண்டறிய மேம்பட்ட தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துகிறது. வங்கி அறிக்கைகள், சொத்துப் பதிவுகள், முதலீட்டு விவரங்கள் மற்றும் பயணப் பதிவுகள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் உள்ள தகவல்களை குறுக்கு சரிபார்ப்பு அதாவது கிராஸ் செக் செய்து தனிநபர்களின் விரிவான நிதி ப்ரொஃபைலை உருவாக்க முடியும். மேலும், இது வருமான ஆதாரங்களை மதிப்பிடுவதற்கும் சாத்தியமான முரண்பாடுகளைக் கண்டறிவதற்கும் பயண முகமைகள், பங்குச் சந்தைகள் மற்றும் நிறுவனங்கள் போன்ற வெளிப்புற மூலங்களிலிருந்து தகவல்களைத் தொகுக்கின்றது.
வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ப்ரொஃபைகளுக்கு ஆய்வு நிலை போன்றவை பயனுள்ளதாக இருக்கும். ஆய்வு மதிப்பீடுகளைத் தொடங்கவும், முரண்பாடுகளை வெளியிடவும், ஆதாரங்களைச் சேகரிக்கவும், வரிகளை வசூலிக்கவும், விசாரணைகளை நடத்தவும் இது திணைக்களத்தை அனுமதிக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் பல பொருட்களை ஒன்றாக வாங்கும்போதோ அல்லது விலை உயர்ந்த பொருட்களை வாங்கும்போதோ கிரெட் கார்ட் மூலம் வாங்கி பின்னர், கிரெடிட் கார்டு பில்களுக்கு ரூ. 1 லட்சம் மற்றும் ரொக்கமாக பணம் செலுத்துகிறோம். இது வருமான வரித்துறையின் கனவத்தை ஈர்க்கும்.
வருமான வரித்துறையின் கவனத்தை ஈர்க்கும் பண பரிவர்த்தனைகளின் பட்டியல்
ஒரு நிதியாண்டில் சேமிப்பு வங்கிக் கணக்கில் ரூ. 10 லட்சத்திற்கு மேல் ரொக்க வைப்பு செய்தாலோ, அதாவது டெபாசிட் செய்தாலோ அல்லது பணத்தை எடுத்தாலோ, அது வருமான வரித்துறையின் கனவத்தை ஈர்க்கும். மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வங்கிகள் அத்தகைய பரிவர்த்தனையைப் பற்றி தெரிவிக்க வேண்டும் என கூறுகிறது. டெபாசிட்கள் பல கணக்குகளில் பரவியிருந்தாலும், அனைத்து கணக்குகளையும் சேர்த்து ரூ.10 லட்சத்தைத் தாண்டி மொத்தத் தொகை இருந்தால், அது ஐ-டி துறையின் கவனத்தை ஈர்க்கும். ஒருவரது கணக்கில் 10 லட்சத்துக்கும் அதிகமான தொகை இருந்தால் அவர் வரி ஏய்ப்பு செய்கிறார் என அர்த்தம் இல்லை, ஆனால் கண்டிப்பாக அப்படிப்பட்ட கணக்குகள் கவனத்தைக் கவரும்.
கீழே கொடுக்கப்பட்டது போன்ற பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. இவற்றுக்கு வருமான வரி நோட்டீஸ் (Income Tax Notice) வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
- ஒரு நிதியாண்டில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்க வைப்பு இருந்தால் அல்லது பணம் எடுக்கப்பட்டால் (Withdrawals).
- ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கத் தொகை நிரந்தர வைப்புத் தொகை கணக்கில் (Fixed Deposit) டெபாசிட் செய்யப்படால்.
- ஒரு நிதியாண்டில் அசையாச் சொத்தின் விற்பனை அல்லது கொள்முதல் ரூ.30 லட்சத்தைத் தாண்டினால்.
- பங்குகள் (Stocks), மியூசுவல் ஃபண்டுகள் (Mutual Funds), கடன் பத்திரங்கள் (Debentures) மற்றும் பத்திரங்களில் (Bonds) ஒரு நிதியாண்டில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பணத்தை முதலீடு செய்தால்.
- ஒரு நிதியாண்டில் கிரெடிட் கார்டு கட்டணங்களை செலுத்த ரொக்கப் பணமாக ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக செலுத்தினால்.
- ஒரு நிதியாண்டில் ரொக்கமாகவோ அல்லது வேறு எந்த வழியிலோ ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக கிரெடிட் கார்டுக்காக கட்டணம் செலுத்தினால்.
- ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு கரன்சி விற்பனை.
- மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள், பத்திரங்கள் அல்லது கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்ய ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணப் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தினால்.
அதிக அளவில் ரொக்கமாக பண பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நபர்கள் வருமான வரித்துறையின் இந்த முக்கிய விஷயங்களைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ