குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு புரதம், இரும்பு மற்றும் துத்தநாகம் அவசியம். எனவே, சரியான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவை துணைபுரிவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
குழந்தை பருவத்தில் மூளை வளர்ச்சிக்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொடுப்பதால், மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும்.சிறு குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் சில உணவு பொருட்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
தயிர்- உங்கள் பிள்ளைக்கு தயிர் அல்லது புரதச்சத்து நிறைந்த பொருட்களை காலை உணவுக்கு கொடுப்பது ஒரு சிறந்த வழியாகும். தயிரில் அயோடின் சத்து அதிகம் காணப்படுகிறது. இது மூளை வளர்ச்சி உதவுவதோடு, மூளையை சுறுசுறுப்பாக வைக்க மிகவும் அவசியமான ஊட்டச்சத்து ஆகும். பால் மற்றும் தயிர் இரண்டிலும் அதிக அளவு புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
முட்டை- முட்டைகளில் மூளை ஆரோக்கியத்தை மேம்ப்படுத்தும் புரதம் மற்றும் பிற சத்துக்கள் அதிகம் உள்ளன. அதிலும் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் கூட இது உதவுகிறது.
ALSO READ | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்
கொட்டைகள்- பாதாம், வால்நட் போன்ற கொட்டைகள் மற்றும் விதைகள் உங்கள் குழந்தையின் உணவில் சேர்த்தல் அவசியம் அவை மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும். இதில் நிறைய புரதம், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளன. கொட்டைகள் மற்றும் விதைகளில் வைட்டமின் ஈ உள்ளது, இது அறிவாற்றலை மேம்படுத்துகிறது. இவை மனதை ஒருமுகப்படுத்தி, நினைவுத் திறனையும் அதிகரிக்கிறது. குறிப்பாக வால்நட்ஸில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. அவை மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
பெர்ரி மற்றும் ஆரஞ்சு - பழங்களில், குறிப்பாக பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த இந்த உணவுகளை உணவில் சேர்ப்பது மனச்சோர்வை தடுக்க உதவும். ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்கள் குழந்தையின் மனதை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க ஒரு நல்ல வழி.
மீன் உணவுகள் - மீன் உணவுகள், அதிலும் குறிப்பாக சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. அவை மூளை வளர்ச்சிக்கு பெரிதும் தேவைப்படுகின்றன. அதிக கொழுப்பு அமிலங்களை உண்ணும் நபர்கள் மூளை ஜெட் வேகத்தில் செயல்படுகின்றன என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR