சுகர் நோயாளியா நீங்கள்? தினமும் காலையில் இந்த ஜூஸ் குடித்தால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள்

Diabetes Diet: பாகற்காய் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால், உடல் பருமன் மற்றும் தைராய்டு போன்ற பிற பிரச்சனைகளையும் கட்டுப்படுத்த உதவும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 27, 2023, 02:12 PM IST
  • சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு
  • நீரிழிவு நோயை குணமாக்கும் பாகற்காய்.
  • பாகற்காய் சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
சுகர் நோயாளியா நீங்கள்? தினமும் காலையில் இந்த ஜூஸ் குடித்தால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் title=

நீரிழிவு நோய்க்கான சாறு: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, மக்கள் தினம் தினம் பல்வேறு வகையான முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் அதற்கான மருந்துகளை உட்கொள்கிறார்கள். சிலர் கடுமையான உடற்பயிற்சி, நடைபயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். சிலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் உணவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது. அந்த வகையில், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 

நீரிழிவு நோயை குணமாக்கும் பாகற்காய்

சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு நல்ல தீர்வாக கருதப்படுகின்றது. சிலர் அதன் கசப்பு சுவையால் பாகற்காய் சாப்பிட விரும்பாவிட்டாலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இதை உட்கொள்கிறார்கள். பாகற்காய் வைட்டமின் சி, துத்தநாகம், நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் ஏ போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இந்த சத்துக்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால், உடல் பருமன் மற்றும் தைராய்டு போன்ற பிற பிரச்சனைகளையும் கட்டுப்படுத்த உதவும்.

பாகற்காய் சுவை பிடிக்கவில்லை என்றால் கசப்பு இல்லாமல் பாகற்காய் சாறு அருந்தலாம். இது சுவையாகவும், சத்தானதாகவும் இருப்பதோடு, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பாகற்காயை எப்படி உட்கொள்வது என இங்கே காணலாம்.

சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு

பாகற்காயை அப்படியே உட்கொள்ள சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அப்படிப்பட்டவர்கள் இதை ஜூஸாக செய்து குடிக்கலாம். பாகற்காய் சாறு தயாரிக்க, முதலில் பாகற்காய் நன்கு கழுவ வேண்டும். பின்னர், அதை நடுவில் வெட்டி, உள்ளே உள்ள விதைகளை வெளியே எடுக்கவும். பாகற்காய் தோலையும் உட்கொள்ளலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகையால் இதன் தோலை அகற்ற வேண்டாம். பிறகு, பாகற்காயை ஒரு ஜூஸரில் போட்டு அதன் சாறு எடுக்கவும். 

அதனுடன் எலுமிச்சை சாறு, சிறிது கல் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைக்கவும். பாகற்காய் சாறு தயார் ஆனதும், வடிகட்டி அதை உட்கொள்ளலாம். சாற்றில் பாகற்காய் விதைகள் இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கருப்பு உப்பு சேர்த்து கொள்ளலாம்.

பாகற்காய் சாறு குடிப்பதால் ஏற்படும் மற்ற நன்மைகள்

எடை இழப்பு: 
பாகற்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது பசியைக் குறைக்கவும், எடையைக் குறைக்கவும் உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: 
பாகற்காயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

மேலும் படிக்க | உடல் பருமனால் அவதியா? கொய்யாவை இப்படி சாப்பிடுங்க... உடனே எடை குறையும்

புற்றுநோய் தடுப்பு: 
பாகற்காய் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: 
பாகற்காயில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

ஆரோக்கியமான செரிமான அமைப்பு: 
பாகற்காயில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

பாகற்காய் சாறு குடிக்க சிறந்த நேரம்

பாகற்காய் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதே சிறந்த நேரம். ஏனெனில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாற்றில் உள்ள சத்துக்கள் முழுமையாக உறிஞ்சப்படும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பதற்றம், கவலைகளை ஓட விரட்டும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News