Health Alert: மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் 4 முக்கிய காரணிகள்

தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக இளம் வயதினர் கூட மாரைப்பால் இறந்து போகும் சம்பவங்கள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், நமது இதய ஆரோக்கியத்திற்காக சில பழக்கங்களை மாற்றிக் கொண்டே ஆக வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 15, 2022, 02:35 PM IST
  • மாரடைப்பு என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மரணத்திற்கான ஒரு முக்கிய காரணமாக மாறியுள்ளது.
  • தீவிர இதய நோய்களைத் தவிர்க்க சில முக்கிய நடவடிக்கைகளை நாம் மேற்க்கொண்டாக வேண்டும்.
  • மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் முக்கிய காரணிகள்.
Health Alert: மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் 4 முக்கிய காரணிகள் title=

முதியவர்களுக்குத் தான் மாரடைப்பு ஏற்படும் என நினைத்துக் கொண்டிருந்த காலம்  மலையேறி விட்டது. தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக இளம் வயதினர் கூட மாரைப்பால் இறந்து போகும் சம்பவங்கள் பெருமளவு அதிகரித்துள்ளன. தமனிகளில் ஏற்படும் அடைப்பு காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. மேலும், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, இதய நோய்  உள்ளிட்ட பல் வேறு காரணிகள் மாரடைப்புக்கு ஏற்படக் காரணமாக இருக்கிறது என்றாலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் இதற்கு ஒரு முக்கிய காரணி என்பதை மறுத்து விட முடியாது. உயர் ரத்த அழுத்தம் மற்றும்  நீரிழிவு நோய் ஆகியவையும் மாரடைப்பு மற்றும் இதய நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கின்றன.

மாரடைப்பு என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மரணத்திற்கான ஒரு முக்கிய காரணமாக மாறியுள்ளது, எனவே, மாரடைப்பு தீவிரமான இதய நோய்களைத் தவிர்க்கக்கூடிய  சில முக்கிய நடவடிக்கைகளை நாம் மேற்க் கொண்டாக வேண்டும். 

மேலும் படிக்க | Fibromyalgia: உடல் வலியை அலட்சியம் செய்ய வேண்டாம்; தசைநார் வலி நோய் காரணமாக இருக்கலாம்

மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் முக்கிய காரணிகள்

1. தூக்கமின்மை

வயது வந்த ஆரோக்கியமான ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணிநேரம் தூங்குவது அவசியம் என்று பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் நம்புகிறார்கள், அவ்வாறு செய்யத் தவறினால் பல பிரச்சனைகள் ஏற்படலாம், அவற்றில் ஒன்று மாரடைப்பு அபாயம். தூக்கமின்மையால், இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது, இது மாரடைப்புக்கு காரணமாகிறது.

2. பதப்படுத்தப்பட்ட இறைச்சி

உணவுப் பாதுகாப்பு நுட்பங்களின் ஏற்பட்டுள்ள மேம்பாட்டின் காரணமாக, இறைச்சியை நீண்ட காலத்திற்கு அழுகாமல் சேமிக்கலாம். ஆனால் சந்தையில் கிடைக்கும் பேக்கேஜ் செய்யப்பட்ட இறைச்சி பெரும்பாலும் பதப்படுத்தப்படுகிறது. இது இதயத்திற்கு நல்லதல்ல, எனவே அதைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம்.

3. அதிக கொலஸ்ட்ரால்

இந்தியாவில், பொரித்த உணவுகளை உண்ணும் போக்கு மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நமது இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது. அது படிப்படியாக தமனிகளில் அடைப்பை உருவாக்குகிறது. இதன் காரணமாக நமது இரத்த அழுத்தம் மிகவும் அதிகரிக்கிறது. இரத்தம் இதயத்தை அடைவதற்கு கூடுதல் ஆற்றலை செலவழிக்க வேண்டியிருக்கும் நிலையில், ​​மாரடைப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

4. மாசுபாடு

கடந்த பல தசாப்தங்களாக, சிறிய மற்றும் பெரிய நகரங்களில் காற்று மாசுபாடு ஆபத்தான அளவை எட்டியுள்ளது. குறிப்பாக பெருநகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமாகி விட்டது, இதனால், சுவாசம் தொடர்பான உடல் நல சிக்கல் ஏற்படுகிறது. அதே போல் நமது இதயமும் படிப்படியாக வலுவிழக்கத் தொடங்குகிறது, எதிர்காலத்தில் இந்தப் பிரச்சனை மாரடைப்பாக மாறுகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News