ஆஸ்டியோபீனியா & எலும்புப்புரை நோயை ஓட ஓட விரட்டும் பழக்கங்களும் உணவுகளும்

Strong bones: இரும்பு போன்ற வலுவான எலும்புகள் இருந்தால், வயது மூப்பினால் ஏற்படும் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை தவிர்த்து நிம்மதியாக வாழலாம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 29, 2023, 06:37 AM IST
  • எலும்புகளை வலுப்படுத்த வழிமுறைகள்
  • பால் குடித்தால் எலும்புகள் வலுப்படுமா?
  • எலும்பு ஆரோக்கியத்திற்கான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்
ஆஸ்டியோபீனியா & எலும்புப்புரை நோயை ஓட ஓட விரட்டும் பழக்கங்களும் உணவுகளும் title=

நமது மோசமான வாழ்க்கை முறையும், தவறான உணவுப் பழக்கமும் நம்மைப் பல பிரச்சனைகளுக்கு ஆளாக்குகிறது. நமது சில தவறுகள் படிப்படியாக நமது எலும்புகளை வலுவிழக்கச் செய்கின்றன. எலும்புகள் வலுவிழப்பது நமது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, ஏனெனில் இளம் வயதிலேயே எலும்புகள் வலுவிழந்து பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். எனவே, நமது எலும்புகள் எப்பொழுதும் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும் வகையில் நமது எலும்புகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

வயதாகும்போது ஆரோக்கியமாக இருக்க, நமது எலும்புகள் வலுவாக இருக்க வேண்டும். கால்சியம் குறைபாடு ஏற்பட்டால் எலும்புகள் பலவீனமடையத் தொடங்கும் என்பதால், வயது அதிகமாகும்போது அதிக சத்து நிறைந்த பொருட்களை தினசரி வாழ்க்கையில் சேர்த்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். தவறான தினசரி பழக்கங்கள், நமது எலும்புகளை வலுவிழக்கச் செய்யும்.

எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க சில முக்கியமான விஷயங்களை பின்பற்றுவது அவசியம் ஆகும்.

மது மற்றும் புகைப்பழக்கம்
புகைபிடித்தல் புற்றுநோயை உருவாக்குவதோடு, எலும்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும். புகைபிடிப்பதும் மது அருந்தினால், அது உங்கள் எலும்புகளுக்கு மோசாமான பாதிப்பை ஏற்படுத்தும். எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க விரும்பினால், புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை நிறுத்துவது அவசியம்.

மேலும் படிக்க | பெண்களுக்கு வரும் எலும்பு வலிக்கு இதுவே காரணம்! சாப்பிட வேண்டிய உணவுகள்
 
எடை அதிகரிக்க விடாதீர்கள்
உடல் பருமன் பல நோய்களைக் கொண்டுவருகிறது. எடை அதிகரிப்பு என்பது, எலும்புகளையும் பாதிக்கிறது. ஆஸ்டியோபீனியா மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் (osteopenia and osteoporosis) ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க, உங்கள் உணவில் குறைந்த கலோரி உள்ள உணவுகளை சேர்ப்பதோடு, கால்சியம் நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும்.

எலும்புகள் பலவீனமானமானால், எலும்பு முறியும் அபாயம் அதிகரிக்கும், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த காலை உணவில் சில உணவுகளைச் சேர்ப்பது நலம் பயக்கும். எலும்பு பலவீனத்தை போக்க, சரியான உணவுமுறையை கடைபிடிப்பது மிகவும் அவசியம் ஆகும்.
 
எலும்புகளின் பலவீனம் உங்கள் முழு உடலையும் பலவீனப்படுத்தும், ஏனெனில் எலும்புகள் உடலுக்கு முக்கிய ஆதரவை வழங்குகின்றன. எலும்புகள் வலுவாக இருக்க, தினசரி போதுமான ஊட்டச்சத்தை பெறுவது மிகவும் முக்கியம், ஆனால் சில நேரங்களில் போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது, இதனால் எலும்புகள் பலவீனமடைகின்றன, 

எலும்புகளை வலுப்படுத்த, பால் குடித்தால் மட்டும் போதாது, கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | எலும்புகளை இரும்பை போல் வலுவாக்கும் ‘சில’ சைவ உணவுகள்!

பால் பொருட்கள்
பால் மற்றும் பிற பால் பொருட்களை உட்கொள்வது வலுவான எலும்புகளுக்கு மிகவும் முக்கியமானது (Dairy products for healthy bones), ஏனெனில் பால் பொருட்கள் கால்சியத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன. உங்கள் காலை உணவில் ஒரு கிளாஸ் பால் அல்லது தயிர் அல்லது மோர் சாப்பிடலாம். இது தவிர பனீர் அல்லது சீஸ் போன்றவற்றையும் காலை உணவில் சேர்க்கலாம்.

ஓட்ஸ் மற்றும் சீரியல்கள்
கால்சியம் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பிற முக்கிய ஊட்டச்சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்ய பாலுடன் ஓட்ஸை உட்கொள்ளலாம். காய்கறிகள் மற்றும் பிற மசாலாப் பொருட்களைச் சேர்த்து ஓட்ஸை கார சுவையிலும் தயாரிக்கலாம். ஓட்ஸை உட்கொள்வதால் உடலுக்கு மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ‘இந்த’ அறிகுறிகள் இருக்கா... உங்கள் எலும்புகள் ரொம்ப பலவீனமாக இருக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News