பெண்கள் 30 வயதை எட்டும் போது அவர்களின் தோல் சுருக்கம் அடைகிறது. சுற்றுச்சூழல், குடும்ப சூழ்நிலை, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணிகளால் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் இளமையான தோலைப் பராமரிக்க, பெண்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றுவது அவசியம். 30 வயதை எட்டும் பெண்கள் இளமை தோற்றத்தை பெற என்ன மாதியான தோல் பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மேலும் படிக்க | முலாம்பழம் விதைகளில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? தூக்கி எறிந்து விடாதீர்கள்
30 வயதை அடையும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான தோல் பராமரிப்புகளில் ஒன்று சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு ஆகும். புற ஊதா கதிர்களின் வெளிப்பாடு காரணமாக முதுமை தோற்றம், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மற்றும் தோல் புற்றுநோய்க்கு கூட ஏற்படலாம். உங்கள் சருமத்தைப் பாதுகாக்க காலநிலை எப்படி இருந்தாலும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். கூடுதல் பாதுகாப்பிற்காக தொப்பி மற்றும் சன்கிளாஸ்களை தினசரி பயன்படுத்துவது நல்லது.
ஆரோக்கியமான மற்றும் இளமை தோற்றமுடைய சருமத்தை பெற தோல் சுத்தப்படுத்துதல், டோனிங், மாய்ஸ்சரைசிங் ஆகியவற்றை உள்ளடக்கிய தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்ற வேண்டும். தோலில் இருந்து இயற்கையான எண்ணெய்களை அகற்றாத மென்மையான க்ளென்சர்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அதைத் தொடர்ந்து சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்த டோனர் பயன்படுத்துங்கள். தோலில் இருக்கும் ஈரப்பதத்தைத் தடுக்க, வறட்சியைத் போக்க உங்கள் தோல் வகைக்கு ஏற்ற ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சரைசரைப் தேர்வு செய்வது நல்லது. பிக்மென்டேஷன் அல்லது மந்தமான தன்மை போன்ற பிரச்சனைகளை தீர்க்க வைட்டமின் சி அல்லது ஹைலூரோனிக் அமிலம் போன்ற உட்பொருட்களைக் கொண்ட சீரம் அல்லது கிரீம்கள் பயன்படுத்துவது நல்லது.
நல்ல நேரேற்றமுள்ள தோல் எப்போதும் இளமையாகவும் தோன்றும். பெண்கள் 30 வயதை அடையும் போது சருமத்தின் இயற்கையான நீரேற்றம் குறையலாம். இதன் காரணமாக வறட்சி மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை இழக்க நேரிடும். உங்கள் உடலை உள்ளே இருந்து ஹைட்ரேட் செய்ய நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். மேலும் தோல் பராமரிப்பில் ஈரப்பதமூட்டும் பொருட்களை பயன்படுத்துவது நல்லது. மிருதுவான தோலை பராமரிக்க இவை அனைத்தும் அவசியமான ஒன்று.
தோல் பராமரிப்பு வழக்கத்தில் ரெட்டினோல் போன்ற பொருட்களைக் கொண்ட தயாரிப்புகளை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கிறது. வைட்டமின் சி மற்றொரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது சருமத்தை பிரகாசமாக்குகிறது, கரும்புள்ளிகளை மறைக்கிறது. இருப்பினும், உங்கள் சருமத்தை சரிசெய்யவும் எரிச்சலைத் தவிர்க்கவும் கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்துவது நல்லது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை இளமையான சருமத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. போதுமான ஓய்வின்மை மற்றும் தூக்கம் மந்தமான மற்றும் முன்கூட்டிய முதுமைக்கு வழிவகுக்கும். எனவே போதுமான தூக்கத்தைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பழங்கள், காய்கறிகள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவை தேர்ந்தெடுப்பது நல்லது. தினசரி உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, மேலும் ஆரோக்கியமான பளபளப்பை ஊக்குவிக்கிறது மற்றும் நச்சுகளை அகற்ற உதவுகிறது. மேலும் புகைபிடிப்பது, மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.
மேலும் படிக்க | சதையுடன் இருக்கும் தொடையை குச்சி போல ஒல்லியாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..
பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறுங்கள். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ