மொபைல் இன்டர்நெட் வேகம்: இந்தியாவுக்கு எத்தனாவது இடம்?

சர்வதேச அளவில் அதிக மொபைல் இன்டர்நெட் வேகத்தின் அடிப்படையில் இந்தியா 109-வது இடத்தைப் பிடித்து உள்ளது.

Last Updated : Mar 27, 2018, 09:21 AM IST
மொபைல் இன்டர்நெட் வேகம்: இந்தியாவுக்கு எத்தனாவது இடம்? title=

சர்வதேச அளவில் அதிக மொபைல் இன்டர்நெட் வேகத்தின் அடிப்படையில் இந்தியா 109-வது இடத்தைப் பிடித்து உள்ளது.

சர்வதேச அளவில் மொபைல் இன்டர்நெட் வேகம் அதிகம் கொண்ட நாடுகளின் தரவரிசைப் பட்டியலை ஓக்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிராட்பேண்ட் இன்டர்நெட் மற்றும் மொபைல் இன்டர்நெட் என இரு பிரிவுகளில் இந்தப் பட்டியல் உள்ளது.

இதில், பிராட்பேண்ட் வேகத்தில் இந்தியா 67-வது இடத்தைப் பிடித்துள்ளது. சராசரி இந்தியாவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகம் 20.72 Mbps என கூறியுள்ளது.

அதே நேரத்தில் மொபைல் இன்டர்நெட் வேகத்தின் அடிப்படையில் இந்தியா 109-வது இடத்தைப் பிடித்து உள்ளது. இதில் சராசரியாக இந்தியாவில் மொபைல் இன்டர்நெட் வேகம் 9.01 Mbps என கூறியுள்ளது. கடந்த ஆண்டு மொபைல் இன்டர்நெட் வேகம் 8.80 Mbps ஆக இருந்தது.

Trending News