புதுடெல்லி: டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில்களின் வருகை தாமதமாகி உள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காலை வேளையில் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் ரயில், விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் குறைந்த காண்புதிறன், பனிமூட்டம் ஆகியவற்றின் காரணமாக ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக 30 ரயில்கள் தாமதமாகி உள்ளது. மேலும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 5 ரயிலின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
#Visuals of #fog in #Safdarjung and #DhaulaKuan areas. 30 trains delayed in the national capital, today, six rescheduled and 18 cancelled #Delhi pic.twitter.com/syGtQF8zlL
— ANI (@ANI) December 27, 2017
அதேநேரத்தில் டெல்லி லோதி ரோடில் காற்று தரம் குறியீட்டு ( air quality index ) மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
#AirQuality Index of #Delhi's #LodhiRoad area; prominent pollutants PM 2.5 at 290 and PM 10 at 276 falling in 'Poor' category pic.twitter.com/SXxZbVyfvH
— ANI (@ANI) December 27, 2017