வெறும் 12 குடும்பங்களை மட்டுமே கொண்டுள்ள, இந்தியாவின் கிழக்கு பகுதியை சேர்ந்த காஹூ கிராமம் தற்போது நாட்டு மக்கள் கவணத்தை ஈர்த்துள்ளது!
இந்திய சீன எல்லைப் பகுதியில் கிழக்குப் பகுதி ஓரத்தில் இருக்கும் கிரமாம் தான் காஹூ. அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் இந்த கிராமத்தில் வெறும் 12 குடும்பகளே வசிக்கின்றன.
ஆக மொத்தமாக 76 மனிதர்களே இங்கு வாழ்வதாக கணக்கெடுப்பு கூறுகிறது. மெயூர் மலைவாழ் மக்களான இவர்கள் இன்றளவும் வசதிகள் ஏதும் இன்றி வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்சாரம் இன்றியும், மொபைல் நெட்வெர்க் இன்றியும் தவிக்கும் இம்மக்களுக்கு எல்லப்பகுதி ராணுவ வீரர்கள் தான் தங்கள் போன்களை கொடுத்து உதவுகின்றனர் என தெரிகிறது.
இதுகுறித்து அம்மக்கள் தெரிவிக்கையில்... "7 தலைமுறைகளாக நாங்கள் இங்கு வசித்து வருகின்றோம். எங்களுக்கு தேவையான அத்தியாவசியி வசிதிகள் ஏதும் இங்கு சரிவர இல்லை. போன் பேச வேண்டும் என்றால் சுமார் 65கிமி வெளியே செல்ல வேண்டும். எனினும் ராணுவ வீரர்கள் உதவியால் அந்த பிரச்சணை அவ்வளவாக தெரியவில்லை.
எங்கள் கிராமத்தில் மொத்தமாக 7 மோட்டார் சைக்கில்கள் உள்ளன. இவற்றைக்கொண்டே எங்களுக்கு தேவையானவற்றை பெற்று வருகின்றோம். தேவையான வசதிகளை அரசு தராவிட்டாலும், மலையினை கடக்க ஏதுவாக பாலத்தினையாவது ஏற்படுத்தி கொடுத்தால் பரவாயில்லை" என தெரிவித்துள்ளனர்.