அறிவு, ஆற்றல், திறமை, புத்திசாலித்தனம் என இவை அனைத்தும் பிறப்பாலும் வருவதுண்டு, மற்றவர்களைப் பார்த்தும் பலர் கற்றுக்கொள்வதுண்டு.
இவை பிறப்பால் யாருக்கு கிடைத்து விடுகின்றனவோ, அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஆனால், மற்றஃவர்களைப் பார்த்து, இவற்றை கற்றுக்கொள்பவர்கள் உழைப்பாளிகள்.
பீகார் (Bihar) மாநிலத்தின் கயா மாவட்டத்தின் மன்பூர் பகுதியின் பட்வடோலி கிராமம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறரு. ஒரு காலத்தில் இங்கு ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தெருவிலும் பவர்லூம்கள் இருந்தன. ஆனால், இப்பொது இந்த கிராமம் மற்றொரு விஷயத்திற்காக அறியப்படுகின்றது.
இந்த கிராமத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும், பல மாணவர்கள் இந்தியாவின் மிகச் சிறந்த திழில்நுட்ப கல்வி நிறுவனமான IIT-யில் இடம் பெறுகிறார்கள்.
தி லாண்டோப்பின் அறிக்கையின்படி, பட்வடோலி முன்பு ‘பீகாரின் மான்செஸ்டர்’ என்று அழைக்கப்பட்டது. இங்கே தறி படுக்கை விரிப்புகள், துண்டுகள் மற்றும் இன்னும் பல ஆடை வகைகள் தயாரிக்க பயன்பட்டன. இருப்பினும், தற்போதைய மாறிய காலங்களில் இந்த பட்வாடோலி கிராமம் ‘Village of IIT-ians’ என்று அடையாளம் காணப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த கிராமத்தில் இருந்து ஒரு டஜன் மாணவர்கள் பெரிய பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்காமலேயே JEE தேர்வில் தேர்ச்சி பெறுகின்றன. இந்த கிராமத்தில் ஒரு நூலகமும் உள்ளது. அது அங்குள்ள இளைஞர்கள் அளிக்கும் நிதி உதவியால் நடத்தப்படுகிறது.
ALSO READ: இப்படியும் சில மனிதர்கள்: பறவைக்காக இருளைத் தழுவிக் கொண்ட அற்புத கிராமம்!!
1996 ஆம் ஆண்டு ஆனது துவக்கம்
1996 ஆம் ஆண்டில், முதன் முதலில் இந்த கிராமத்தின் மாணவர்கள் IIT-யில் இடம் பிடித்தார்கள். அது ஒரு நல்ல ஆரம்பமாக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் இந்த கிராமத்திலிருந்து பல மாணவர்கள் IIT-ல் இடம் பிடித்து வருகிறார்கள்.
நூலகம் இந்த கிராமத்தின் ஒரு முக்கிய மையமாக உள்ளது
இந்த கிராமத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக, அனைவரையும் ஈர்க்கும் மையமாக இருப்பது இங்குள்ள நூலகமாகும் (Library). இங்கே மாணவர்கள் இலவசமாக படிக்கலாம். IIT-யில் படித்து முடித்த அல்லது அங்கு படித்துக் கொண்டிருக்கும் இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள், இந்த கிராமத்து மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைன் கோச்சிங்கும் அளிக்கிறார்கள்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கு இந்த கிராமம் ஒரு அருமையான உதாரணமாக விளங்குகிறது. சாதிக்க நினைத்தால் எதுவுமே ஒரு தடை அல்ல என்பதை இந்த கிராமம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டுகிறது.
ALSO READ: இந்த அழகிய தமிழக கிராமத்தில் கொரோனா எட்டிக் கூட பார்க்கவில்லை: ரகசியம் என்ன?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR