காங்கிரஸ் கட்சியை பொருத்த வரை "ஒன்லி ராகுல் ஒன்லி பிரியங்கா": அமித் ஷா கிண்டல்

தனது வாக்குறுதியை நிறைவேற்றி வரும் பிரதம மந்திரி மோடி அவர்கள் ஒரே வருடத்தில் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றி உள்ளார்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jan 28, 2019, 07:14 PM IST
காங்கிரஸ் கட்சியை பொருத்த வரை "ஒன்லி ராகுல் ஒன்லி பிரியங்கா": அமித் ஷா கிண்டல்
Pic Courtesy : ANI

இமாச்சல பிரதேசத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிரியங்கா காந்தி கட்சியில் இணைந்ததை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசி உள்ளார். பல நாட்களாக இந்திய இராணுவ வீரர்கள் ஒரே பதவி - ஒரே பென்சன் திட்டத்திற்காக போராடி வந்தனர். முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி நிறைவேற்றவில்லை. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசி பதவியேற்ற ஒரே வருடத்தில் ஒரே பதவி - ஒரே பென்சன் (OROP) திட்டத்தை நிறைவேற்றியது. 

ஒரே பதவி - ஒரே பென்சன் (OROP) திட்டத்தை காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பிட்டு பேசிய அமித் ஷா, "ஒன்லி ராகுல் ஒன்லி பிரியங்கா" என கிண்டல் செய்திருக்கிறார். 

இது தவிர, மேலும்ன் அமித் ஷா பேசுகையில், "ஜேஎன்யு-வில் நாட்டுக்கு எதிராக கோஷங்களை எழுப்புவர்களின் பின்னால் ராகுல் காந்தி உட்கார்ந்துக் கொண்டு இருக்கிறார். ராகுல் பாபா அவர்கள் என்னுடைய தலைவரை குறித்து எவ்வளவு தவறான கருத்தை கூறமுடியுமோ.. கூறட்டும். அனல் ஒரு விசியத்தை தெளிவாக புரிந்துக்கொள்ளுங்கள், இந்தியாவை பிளவுப்படுத்தும் விதமாக யாராவது பேசினால் என்றால், அரசு அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.

650 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் ஜாமீனில் வெளியே சுற்றுப்பவர்கள் மோடி மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். காங்கிரஸ் அரசாங்கம் வறுமை ஒழிக்காமல் நான்கு தலைமுறைகளாக என்ன செய்தது? ஆனால் வறுமை ஒழிப்பதாக வாக்குறுதி மட்டும் அளிக்கும். 

ஒரு நாட்டை ஒரு தலைவன் மட்டுமே நடத்த முடியும். ஒரு வியாபாரி நடத்த முடியாது எனக்கூறினார்