புதுடெல்லி: இன்னும் சில வாரங்களில் மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 43 பெயர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. பாஜக அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைய இருப்பதால், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலில் முன்னாள் முதல்வர்களின் மகன்கலின் பெயர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பழம்பெரும் கட்சியின் இரண்டாவது பட்டியலில் மொத்தம் 43 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
Congress releases the second list of candidates for the upcoming Lok Sabha elections.
Congress MP Gaurav Gogoi to contest from Jorhat, Assam. Nakul Nath to contest from Madhya Pradesh's Chhindwara. Rahul Kaswa to contest from Rajasthan's Churu and Vaibhav Gehlot to contest from… pic.twitter.com/oms2aliTqF
— ANI (@ANI) March 12, 2024
இன்று வெளியான காங்கிரஸ் கட்சியின் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகன் கௌரவ் கோகோய் உட்பட 43 பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் படிக்க | மக்களவை தேர்தல் 2024: திமுக போட்டியிடும் தொகுதிகள்... வெளியான உத்தேச இடங்கள் லிஸ்ட்!
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்; மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல்நாத் என கட்சியின் மூத்தத் தலைவர்களின் வாரிசுகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன..
இன்னும் சில நாட்களில் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்கவும், மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது.
ஆனால், பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்காக 43 பெயர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தமிழகம் பாஜக பக்கம் திரும்புவதற்கான நல்ல சூழல் உருவாகி உள்ளது - வானதி சீனிவாசன்
அசாம், ராஜஸ்தான், குஜராத், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிங்களுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். 39 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை ஏற்கனவே காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் அடுத்தகட்ட வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்படலாம்.
இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலில், இந்த இரண்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் மாற்றப்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. இருந்தாலும், தற்போது எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி, நீண்ட காலம் இந்தியாவை ஆட்சி செய்துள்ள கட்சி என்பதால் கட்சியின் வேட்பாளர் பட்டியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் திராவிட முன்னேற்ற கழகம், 20 தொகுதிகளில் தனியாகவும், மதிமுக, விசிக, கொமதேக, ஐஜேகே ஆகிய கட்சிகள் தலா 1 வேட்பாளர்களை உதயச்சூரியன் சின்னத்திலும் நிறுத்தின. 24 தொகுதிகளில் கடந்த முறை உதயசூரியன் சின்னம் போட்டியிட்ட நிலையில், இம்முறை 22 தொகுதிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 'தேர்தல் நேரம்... CAA மூலம் கரையேற பார்க்கிறார் பிரதமர்' - ஸ்டாலின் கடும் சாடல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ