ஒடிசாவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று..?

ஒடிசாவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

Last Updated : Feb 4, 2020, 11:21 AM IST
ஒடிசாவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று..?  title=

ஒடிசாவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

சீனாவின் ஹூபே மாகாணம், வுஹான் நகரில் உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் உருவானது. அந்த வைரஸ் சீனா மட்டுமின்றி 27 நாடுகளுக்கு வேகமாகப் பரவியுள்ளது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, 425 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒடிசாவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் அதிகம் பாதிப்பு இருப்பதால் 10 நாட்களில் தனி மருத்துவமனை கட்டி முடிக்கப்பப்டுள்ளது. இங்கு இன்று முதல் உள்நோயாளிகள் சேர்க்கப்பட்டு சிகிச்சை துவங்கி உள்ளது.

கேரளாவில் 2 ஆயிரம் பேர் தீவிரமாக கண்காணிப்பில் உள்ளனர். இது போல் தற்போது ஒடிசாவில் கட்டாக் மருத்துவமனையில் 4 பேர் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக சேர்க்கப்பட்டனர். இதில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் இல்லை என தெரிய வந்துள்ளது. 3 பேர் இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 8 ஆயிரத்து 878 பேர் மும்பை விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டனர். இதில் மஹாராஷ்டிராவை சேர்ந்த 21 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது. இதில் 18 பேருக்கு நெகடிவ் ரிப்போர்ட் வந்துள்ளது.

"புனேவின் என்.ஐ.வி.க்கு அனுப்பப்பட்ட # ஒடிசாவிலிருந்து நான்கு மாதிரிகள் எதிர்மறையாகக் காணப்பட்டன. அனைத்து சேகரிப்பாளர்களும் தங்கள் மாவட்டங்களில் விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், தயவுசெய்து @HFWOdisha ஹெல்ப்லைன் எண்: 0674-2390466 / 9439994857, ஐ தொடர்பு கொள்ளவும்." பத்திரிகை தகவல் பணியகம் திங்களன்று ட்வீட் செய்தது.

அனைத்து மாதிரிகளும் புவனேஸ்வரில் உள்ள பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்திலிருந்து என்.ஐ.வி புனேவுக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான மையமாக இந்த மையம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News