சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக மக்களை பாடாய் படுத்தி வரும் கொரோனா தொற்று இன்னும் நம்மை விட்டபாடில்லை. பல்வேறு வடிவங்களில், பல்வேறு மாறுபாடுகளில் மாறி மாறி மக்களை அச்சத்தின் உச்சியிலேயே வைத்துள்ளது இந்த பெருந்தொற்று.
இந்தியாவில் தினசரி கொரோனா எண்ணிக்கை இன்று ஒரு லட்சத்தை கடந்து இருக்கிறது.
முதல் அலையில் இந்த எண்ணிக்கையை எட்ட 120 நாட்கள் ஆனது. இரண்டாவது அலையில் இந்த எண்னிக்கை 50 நாட்களில் எட்டப்பட்டது.
நாம் இப்போது எதிர்கொண்டிருக்கும் மூன்றாவது அலையில் (Corona Third Wave) வெறும் 10 நாட்களில் ஒரு லட்சம் ஒரு நாள் கொரோனா எண்ணிக்கையை நாம் கடந்து விட்டோம். இது மக்கள், அரசு, நிர்வாகம் என அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ALSO READ | எச்சரிக்கையுடன் இருங்கள்; Omicron இன் ஒரு முக்கிய அறிகுறி இதுதான்
இதற்கு முன்னர், ஜூன் 6, 2021 அன்று நாட்டில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அப்போது தீவிரத்தில் இருந்த கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் அழிவை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், அதிக அளவில் பரவக்கூடிய ஓமிக்ரானின் எண்ணிக்கை 3,000-ஐத் தாண்டியுள்ளது. 1,199 நோயாளிகளும் குணமடைந்துள்ளனர். தற்போது இந்தியாவில் ஒமிக்ரான் (Omicron) தொற்று 27 மாநிலங்களில் பரவி உள்ளது.
நாட்டில் தினசரி நேர்மறை விகிதம் இப்போது 7.74 சதவீதத்தைத் தொட்டுள்ளது. வாராந்திர நேர்மறை விகிதம் 4.54 சதவீதமாக உள்ளது.
மறுபுறம் தடுப்பூசி (Vaccination) செயல்முறையும் நாட்டில் முழு மூச்சுடன் நடந்துகொண்டிருக்கின்றது.
ALSO READ | Omicron: அறிகுறிகள் என்ன? எவ்வளவு நாட்களில் தெரியும்? முக்கிய தகவல்கள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR