கரன்ஸி விவகாரம்: பிரதமர் மோடியை பாராட்டு பில்கேட்ஸ்

Last Updated : Nov 17, 2016, 01:19 PM IST
கரன்ஸி விவகாரம்: பிரதமர் மோடியை பாராட்டு பில்கேட்ஸ்  title=

பழைய நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடி அறிவிப்புக்கு பில்கேட்ஸ் வரவேற்றுள்ளார்.

கடந்த 8-ம் தேதி கருப்பு பணம் மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனைகளை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு பழைய 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், அவற்றை வங்கிகளில் செலுத்தி புதிய ருபாய் நோட்டுகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது. 

இந்த நிலையில் மக்கள் வங்கிகளுக்கு சென்று தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று வருகிறார்கள். ஏடிஎம் மையங்களில் ரூ.2,500 வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் டெல்லி வந்துள்ள பில்கேட்ஸ் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார்.

பிறகு நிருபர்களிடம் பில்கேட்ஸ் பேசியதாவது:- மோடியின் முடிவை வெகுவாக பாராட்டினார். ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதன் மூலம் நிழல் பொருளாதாரம் ஒழிக்கப்பட்டு, வெளிப்படையான பொருளாதாரம் வலுப்பெறும் என்று தெரிவித்தார். மேலும் தொழில் நுட்பத்தை அதிகம் நம்புபவன் நான் என்று கூறிய பில்கேட்ஸ் மக்கள் அதை பயன்படுத்தும் போதுதான் தொழில்நுட்பம் அதிக அளவு வலுப்பெறும் என்று தெரிவித்தார். 

உலக நாடுகள் முயற்சிக்க பயப்படும் ஒரு விசியத்தை இந்தியா முயற்சித்துள்ளதாகவும் பில்கேட்ஸ் கூறினார். தற்போது, பெரிய பிரச்னைகளை தீர்க்கும் அளவுக்கு திறமை பெற்ற அரசை இந்தியா பெற்றுள்ளது என்றார்.

Trending News