புதுடெல்லி: நாட்டில் 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றால் 67,708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 680 பேர் உயிரிழந்த நிலையில், நாட்டில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73.07 லட்சமாக அதிகரித்துள்ளது என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (MoHFW) தரவு தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின் கூற்றுப்படி, COVID-19-ன் மொத்த எண்ணிக்கையில், 8,12,390 பேர் சிகிச்சையில் உள்ளனர். 63,83,442 பேர் குணமடைந்துள்ளனர்.
மீட்பு விகிதம் (Recovery Rate) 87.36 சதவீதமாகவும் இறப்பு விகிதம் (Fatality Rate) 1.52 சதவீதமாகும் உள்ளன.
ஏறக்குறைய பதினைந்து நாட்களாக இறப்புகள் 1,000 க்கு கீழே வந்துள்ளன. செப்டம்பர் 17 அன்று இந்தியாவில் 97,894 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், 1,96,761 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், மகாராஷ்டிரா (Maharashtra) நாட்டில் COVID-19 ஆல் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக தொடர்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 13,16,769 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 40,859 பேர் உயிரிழந்துள்ளனர்.
ALSO READ: COVID-19 Vaccine இந்தியாவில் யாருக்கு முதலில் கிடைக்கும்? விவரங்களை அளித்தது மத்திய அரசு
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மற்ற மாநிலங்களில், கர்நாடகாவில் 1,14,006 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,11,167 பேர் குணமடைந்துள்ளனர். 10,198 பேர் இந்த கொரோனா வைரசுக்கு பலியானார்கள்.
டெல்லியில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 21,903 ஆக உள்ளது. 2,89,747 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 5,898 பேர் இந்த நோய் காரணமாக இறந்துள்ளனர்.
இதற்கிடையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) படி, நாட்டில் COVID-19 க்கு பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகள் 9 கோடியை தாண்டியுள்ளன. COVID-19 க்காக புதன்கிழமை வரை மொத்தம் 9,12,26,305 மாதிரிகள் நாட்டில் சோதனை செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 14 அன்று பரிசோதிக்கப்பட்ட 11,36,183 மாதிரிகளும் இதில் அடங்கும்.
ALSO READ: Shocking: கொரோனா தொற்றால் காது கேளாமல் போகலாம்: லண்டன் ஆய்வு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR