முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் தான் என் மகனை பழிவாங்கும் செயலில் சிபிஐ ஈடுபட்டு உள்ளது என போலீஸ் கமிஷனரின் தாயார் கூறியுள்ளார்.
சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ அதிகாரிகள் நேற்று கொல்கத்தா கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்திய பின்னர் தான் சிபிஐ அதிகாரிகளை விடுவித்தனர். இச்சம்பவம் மேற்கு வங்காளத்தில் பெரும் அதிர்வலையை ஏற்ப்படுத்தி உள்ளது.
இதுக்குறித்து திரிணாமுல் காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வருகிறது. அதேவேளையில் பாஜக திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரின் தாயார் கூறுகையில், மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக வின் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள வந்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் தான் என் மகன் மீது அரசியல் துஷ்பிரயோகத்தை காட்டி சிபிஐ கைது செய்யப் பார்க்கிறது. அவரின் இல்லத்தில் சிபிஐ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவரை பழிவாங்க மத்திய அரசு முயற்சித்தது என போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரின் தாயார் கேடி குப்தா தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் பாஜக வின் பலத்தை நிரூபிக்க பல இடங்களில் கூட்டம் பாஜக அரசு தேர்தல் பிரச்சாரம் நடத்த முயற்சித்து வருகிறது. இதில் பாஜக வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ள இருக்கின்றன. அந்த வகையில் நேற்று வடக்கு தினஜ்பூரில் பாஜகவின் பேரணி நடந்தது. அதில் கலந்துகொள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொள்ள தனி ஹெலிகாப்டர் மூலம் நேற்று சென்றார். ஆனால் ஹெலிபேட் பழுதுபார்த்தல் பணியைக் காரணம் காட்டி ஹெலிகாப்டர் தரையிரங்க முடியாது என மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. இதனால் யோகி அந்த பேரணியில் தொலைபேசி மூலம் உரையாடினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.