முதல்வரின் பதவிக்கு தொடர்ந்து உரிமை கோரும் சிவசேனா...!

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக, சிவசேனா இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்!

Last Updated : Sep 29, 2019, 07:40 AM IST
முதல்வரின் பதவிக்கு தொடர்ந்து உரிமை கோரும் சிவசேனா...! title=

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக, சிவசேனா இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்!

மகாராஷ்டிராவில் 288 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தொகுதி பங்கீடு குறித்து கிடைத்த தகவலின்படி, மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 144 இடங்களிலும், சிவசேனா 126 இடங்களிலும் போட்டியிடும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற இடங்கள் சிறிய கட்சிகளுக்கு வழங்கப்படும் என தெரிகிறது. 

மேலும், 126 இடங்களைத் தவிர்த்து துணை முதல்வர் பொறுப்பும் சிவசேனா கட்சிக்கு வழங்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜக உயர்மட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே; "பாஜகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. இருகட்சிகளும் இணைந்தே தேர்தலில் போட்டியிடும். தொகுதி பங்கீட்டு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

பாஜக உடனான கூட்டணி பேச்சு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு கட்சிகளுக்கான இடங்களை இறுதி செய்ததும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். எங்கள் கூட்டணி பலமாகவே உள்ளது. அரசியலில் நாங்கள் எதிர்த்தால் நேரடியாகவே எதிர்ப்போம். யாரையும் முதுகில் குத்தி பழக்கம் இல்லை. வரும் தேர்தலில் வெற்றி பெற்று சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆக பாடுபடுவோம்" என அவர் கூறினார்.   

 

Trending News