கொரோனா வைரஸ் பதிவாகாத அந்த 10 மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்கள்...

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் 10 மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களில் இருந்து கோவிட் -19 வழக்கு எதுவும் பதிவாகவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

Last Updated : May 10, 2020, 04:44 PM IST
கொரோனா வைரஸ் பதிவாகாத அந்த 10 மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்கள்... title=

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் 10 மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களில் இருந்து கோவிட் -19 வழக்கு எதுவும் பதிவாகவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தேசிய தலைநகரில் உள்ள மண்டோலி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு கோவிட் பராமரிப்பு மையத்தின் பணிகளை ஆய்வு செய்த பின்னர், இதனை அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்கள் / UT-க்களில் இருந்து கொரோனா வைரஸ் தொடர்பான எந்த சம்பவமும் பதிவாகவில்லை." என தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசு இதுவரை 72 லட்சம் என் 95 முகமூடிகள் மற்றும் 36 லட்சம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரண கருவிகளை மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"நாட்டின் சில மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் சமீபத்திய COVID-19 ஐப் பற்றி புகாரளிக்கவில்லை என்று கூறிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஜ வர்தனின் கூற்றுப்படி, நாடு முழுவதும் 4,362 COVID-19 பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு 3,46,856 நோயாளிகள் லேசான அல்லது மிகவும் லேசான அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 62,939 கோவிட் -19 நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளது., அவற்றில் 19,358 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் 2,109 பேர் தொற்றுநோயால் பலியாகியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான மத்திய அரசு செய்திகுறிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Trending News